அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நிர்மான் ஊக்குவிப்பு முதல் குழுவில் 15 ஸ்டார்ட்-அப்கள் தேர்வு
நிலையான தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் முனைவோருக்கான நிர்மான் முதல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து ஸ்டார்ட்-அப்கள் விரைவில் சுகாதாரம், விவசாய களங்களில் தீர்வுகளை நோக்கி செயல்படத் தொடங்கும்.
ஸ்டார்ட்-அப்ஸ் தொழில் பாதுகாப்பகம் மற்றும் புத்தாக்க மையம் (எஸ்ஐஐசி) ஐஐடி கான்பூரால் தொடங்கப்பட்ட நிர்மான் ஊக்குவிப்பு திட்டத்தின் முதல் குழுவாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஆதரிக்கப்படும் இத்திட்டம். இந்தியாவின் உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் தயாரிப்பு மேம்பாட்டு பயணத்தில் உள்ள சவால்களை தீர்க்க உதவும்.
திட்டத்திற்கான அழைப்புகள் ஜூலை 2022 இல் தொடங்கப்பட்டன. ஸ்டார்ட்-அப்கள் தீவிர ஆய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்டார்ட்-அப்களை தயார்படுத்துவதற்கான குடியிருப்புப் பட்டறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
ஸ்டார்ட்அப்களுக்கான முதல் 3 நாள் குடியிருப்புப் பட்டறையில், சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கான நிதி வாய்ப்புகள், இணக்கம் மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெருவணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த திட்டத்தில் தொடக்க நிறுவனர்களுடன் தங்கள் நுண்ணறிவு மற்றும் கற்றலைப் பகிர்ந்து கொண்டனர். கூட்டுக் குழுவின் கீழ் உள்ள ஸ்டார்ட்அப்களுக்கு அரசு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், முக்கிய தொழில் தலைவர்கள் ஆகியோரைத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
கருத்துகள்