நடப்பு 2022-23-ஆம் ஆண்டு பருத்தி பருவத்தில் 40 லட்சம் பருத்தி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டில் மொத்த பருத்தி உற்பத்தியில் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்கள் 65 சதவீதம் அளவிற்கு உற்பத்தி செய்வதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷணா ஜர்தோஷ் கூறியுள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று இதனைத்தெரிவித்தார்.
நடப்பு 2022-23-ம் ஆண்டு பருத்தி பருவத்தில் 40 லட்சம் பருத்தி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கூடுதல் பருத்தி இருப்பை பொருத்து இது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டில் 2.43 லட்சம் பருத்தி பண்டல்களும், 2021-22-ம் ஆண்டில் 3.60 லட்சம் பருத்தி பண்டல்களும், 2022-23-ம் ஆண்டில் (தற்காலிகமாக) 1.87 லட்சம் பருத்தி பண்டல்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்