முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? நீதிபதிகள் வினாவிற்கு இன்று விவாதம் விடைதருமா!

அயல் நாட்டின் சட்டங்கள், நமது நாட்டின் பாம்பரியம் மற்றும் கலாச்சாரம், வரலாற்றுப் பெறுமையுடன் கலந்த காலங்காலமாக வந்த  வாழ்வியல் முறைமை


எல்லாம் அறியாத. நம் நாட்டிற்கு துளியும் சம்பந்தப்படாத பீட்டா ,புளூகிராஸ் போன்ற அமைப்புகள் நமது நாட்டு விழாக்களில் புகுந்து தடை செய்ய முயலும் செயலாகப் பார்க்கும் பீட்டாவின் நீதிமன்ற வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் ஆலயத்தில் நந்தியாக, ஆன்மீகத்தில் ரிஷபமாக, விவசாயத்தில் உதவும் காளைகளை வீட்டில் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் நமது மக்கள் சார்ந்த வினா ?தற்போதய சட்டம் நீதி சார்ந்த இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

2011 அம் ஆண்டில் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு வலுத்தது . பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதித்தது.

இந்த தடைக்குத் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பும் எழுந்த நிலையில். 2017 ஆம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பெரிய மக்கள் திரள் போராட்டம் நடந்ததையடுத்து அப்போதிருந்த அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.


வந்தேரிகளான பீட்டா போன்ற அமைப்புகள் காளைகளைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டா? ஏற்கவே முடியாது. என வானத்துக்கும் பூமிக்கும் குதியோகுதியெனக் குதித்து  வாதத்தை முன்வைக்க  உச்சநீதிமன்றம் இந்த  சுளீர் கேள்வியை கேட்ட நிலையில் வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.

 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அவசரச் சட்டத்துக்கு தடைகோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தி கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கம்பளா எனும் எருதுகட்டு விடும் போட்டிக்கு தடைகோரியும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.  உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடக்கிறது. நேற்று  காலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.  அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் பாசமாக வளர்க்கப்படும் காளைகள் பீட்டா வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் காளைகள் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாக அமைந்துள்ளது  .நேற்று  மீண்டும் நடந்த  விசாரணையில்


பீட்டா சார்பில் வாதம் செய்த மூத்த வழக்குரைஞர்  ஷ்யாம் திவான் வாதிட்டார். ‛‛பாரம்பரியக் காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றியிருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. மேலும் காளைகளை பாதுகாப்பதாகக் கூறி அவசரச் சட்டம் வாயிலாக காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது. காளையை வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. விதிகள், சட்டங்கள் இருந்தாலும் கூட அதனை முழுமையாக பாதுகாப்பானதாக நடைமுறைப்படுத்த முடியாது'' என்றார்.


வாதங்களை கேட்ட நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் அமர்வு சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்காக புதிதாக சட்டம் உள்ளது. வழிமுறைகள் உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கண்காணிக்கிறார். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டுக் காளைகள் திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை. முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகு தான் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இறுதிக் கேள்வி இதுதான்  பல ஆண்டு காலமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாகப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், மிகுந்த பாசத்துடன் காளைகள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை கொடூரமானதென அனைவரும் கூறுவார்களா?. இருப்பினும் காளைகளை கொடுமைப்படுத்தப்படும் செயல்களை அனுமதிக்க முடியாது. தற்போது விதிமீறல் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் ஜல்லிக்கட்டை எந்த வடிவத்திலாவது நடத்தலாமா? அல்லது நடத்தவே முடியாதா? என்பது தான் இறுதிக்கேள்வியாக உள்ளது'' எனக்கூறி வழக்கை நேற்று  ஒத்திவைத்தனர். அந்த வழக்கு மீண்டும் இன்று  விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...