நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இ-வணிகத்தில் போலி மற்றும் ஏமாற்றும் மதிப்பீடுகளைத் தடுத்து நுகர்வோர் நலனைப் பாதுகாக்க இந்தியத் தரநிர்ணய அமைவனம் கட்டமைப்பை அறிவித்துள்ளது
இ-வணிகத்தில் போலி மற்றும் ஏமாற்றும் மதிப்பீடுகளைத் தடுத்து நுகர்வோர் நலனைப் பாதுகாக்க ‘இணையவழி நுகர்வோர் மதிப்பீடுகள் - அவற்றின் சேகரிப்பு, இணைப்பு மற்றும் வெளியீட்டுக்கான கோட்பாடுகள் மற்றும் தேவைகள்’ குறித்த கட்டமைப்பை இந்தியத் தரநிர்ணய அமைவனம் 23.11.2022 அன்று அறிவித்திருப்பதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி செளபே மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
இணையவழி நுகர்வோர் மதிப்பீடுகள் செய்வோரை அடையாளம் காணவும் சரிபார்க்கவும் சில நடைமுறைகள்:
1) ஒன்று அல்லது அதற்கும் கூடுதலாக மின்னஞ்சல்களை அனுப்பி பதிலுக்காகக் காத்திருந்து சரிபார்த்தல்;
2) ஒரு இணைப்பைக் க்ளிக் செய்வதன் மூலம் தங்களின் பதிவை உறுதிசெய்யுமாறு மதிப்பீட்டாளரைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்புவது;
3) இணையதளங்களைப் பாதுகாக்கும் கணினி உள்ளீடு (ப்ரோக்ராம்) மூலம் சரிபார்த்தல்;
4) தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் சரிபார்த்தல்;
5) கேப்ச்சா நடைமுறையைப் பயன்படுத்தி சரிபார்த்தல்
கருத்துகள்