தேசிய விலங்கியல் பூங்காவில் சர்வதேச சிறுத்தைகள் தினம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது
இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில், சர்வதேச சிறுத்தைகள் தினமும், வனவிலங்கு பாதுகாப்பு தினமும் நேற்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மத்திய விலங்குகள் ஆணையத்தின் பங்களிப்புடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் புதுதில்லியில் உள்ள பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஜோர்மல் பெரிவால் நினைவு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 175 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் தேசிய வனவிலங்கு பூங்கா மற்றும் மத்திய வனவிலங்கு ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர்.
இளைய தலைமுறையினர் மத்தியில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த புரிதலை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
கருத்துகள்