சுற்றுலா அமைச்சகம்
பெண்தொழிலாளர்களைப் பெருமளவில் கொண்டவற்றில் ஒன்றாக சுற்றுலா தொழில்துறை உள்ளது: அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி
சுற்றுலாத் தொழில் பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாமல், பருவகாலம் மற்றும் பல்வேறு துறைகளில் துண்டு துண்டாக இருப்பதால், சுற்றுலாத் துறை பணியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண்தொழிலாளர்களைப் பெருமளவில் கொண்டவற்றில் ஒன்றாக சுற்றுலா தொழில்துறை உள்ளது. பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க பெண் ஊழியர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த தொழில்துறை பங்குதாரர்கள் மூலம் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் தன்னார்வ நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் சட்டங்களில் உள்ள பல்வேறு விதிகள் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு, சம வாய்ப்பு மற்றும் இணக்கமான பணிச்சூழலை வழங்குகின்றன. இவற்றில் சில:
(i) சமூகப் பாதுகாப்பு குறித்த சட்டம், 2020
(ii) ஊதியங்கள் பற்றிய சட்டம், 2019
(iii) பேறுகாலப் பயன் சட்டம், 1961 (2017ல் திருத்தப்பட்டது)
(iv) பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் திரு ஜி.கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார்
கருத்துகள்