பீகார் இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்
பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருபவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 74 வயதான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்வதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் மாதல் 5- ஆம் தேதி அறுவைச் சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரகம் அளிக்கிறார். இதற்காக லாலுபிரசாத் யாதவ், கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் சென்ற நிலையில் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் உடன் செல்ல டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதியளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூபாய்.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு நடப்பது நிலுவையிலுள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் சென்றார்கள். லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா. சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுநீரகப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வரும் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்று நீண்ட காலமாகவே ரோஹிணி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், லாலு தட்டிக்கழித்த நிலையில் தற்போது அவரும் சிங்கப்பூர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் லாலு சிங்கப்பூர் சென்றார். அப்போது அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
அப்போதே ரோஹிணி தனது சிறுநீரகங்களைத் தானமாகத் தர முன்வந்துள்ளார். ஆனால், அப்போது லாலு அதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதன் பின்னர், இரத்த சம்பந்தம் உடையவர்கள் சிறுநீரகம் வழங்கினால் அது வெற்றிகரமாக அமையுமென்று எடுத்துரைத்து தந்தை லாலுவிடம் சம்மதம் பெற்றுள்ளார். அதனையடுத்து முறைப்படி அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது. இன்று அறுவைச்சிகிச்சை நடக்கிறது
கருத்துகள்