2023 ஆம் ஆண்டு ‘படைவீடு திரும்புதல்’ விழாவில் செவ்வியல் ராகங்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய இசை இசைக்கப்படும்
புது தில்லியின் மையப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2023, ஜனவரி 29 அன்று நடைபெறவுள்ள இந்த ஆண்டின் 'படைவீடு திரும்புதல் ' விழா இந்திய செவ்வியல் ராகங்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய இசையின் சுவையுடையதாக இருக்கும். இந்த விழாவில் குடியரசுத் தலைவரும் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பார்.
ராணுவம், கப்பற்படை, விமானப்படை மற்றும் மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் இசைக்குழுக்களால் மனதைக் கவரும், கால் தட்டவைக்கும் 29 இந்திய இசை இசைக்கப்படும்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்ளும் இவ்விழாவில், 3,500 உள்நாட்டு ஆளில்லா விமானங்கள் அடங்கிய நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் ஷோவும் நடைபெறும். ரைசினா மலைகளின் மீது நடைபெறும் அற்புதமான ட்ரோன் ஷோ மாலை நேர வானத்தை ஒளிரச் செய்யும், மென்மையான ஒத்திசைவு மூலம் எண்ணற்ற தேசிய உருவங்கள்/நிகழ்வுகள் உருவாக்கப்படும்.
வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் முகப்பில் நடைபெறஉள்ள படைவீடு திரும்புதல் விழா 2023-ன் போது முதன்முறையாக, முப்பரிமாண (3-டி) பலகோணக் காட்சிப்படுத்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் நீடிக்கும் குடியரசு தின விழாவின் நிறைவைக் குறிப்பது படைவீடு திரும்புதல். நிறங்கள் மற்றும் தரநிலைகள் அணிவகுத்து நடத்தப்படும்போது இது தேசத்தின் பெருமிதமாக வெளிப்படுகிறது.
பெருந்திரளான இசைக்குழுக்களால் நிகழ்த்தப்படும் தனித்துவமான இந்த விழா, 1950 களின் முற்பகுதியில் இந்திய ராணுவத்தின் மேஜர் ராபர்ட்ஸ் உள்நாட்டில் உருவாக்கியதன் தோற்றத்தைக் குறிக்கிறது. இது பல நூற்றாண்டுகள் பழமையான இராணுவ பாரம்பரியத்தைக் குறிக்கிறது. சூரியன் மறையும்போது துருப்புக்கள் சண்டையை நிறுத்தி, தங்கள் ஆயுதங்களை உறைகளுக்குளிட்டு போர்க்களத்தை விட்டு வெளியேறி, படைவீடு திரும்பும் இசையுடன் முகாம்களுக்குத் திரும்புவர். நிறங்கள் மற்றும் தரநிலைகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் கொடிகள் இறக்கப்பட்டிருக்கும். படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் காட்சிகள்.”
கருத்துகள்