அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலக்ட்ரோலைட் சிறந்த அமோனியா கலவைக்கு உதவும்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலக்ட்ரோலைட், மின் வேதியியல் அமோனியா கலவைக்கு உதவுவதோடு தொழிற்சாலைகளில் பசுமை எரிசக்தி அல்லது ஹைட்ரஜன் உற்பத்திக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் இருக்கும் நானோ அறிவியல் தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் விஞ்ஞானிகள் என்ஏபிஎஃப்4 (NaBF4)
என்ற புதிய எலக்ட்ரோலைட்டை அறிமுகம் செய்துள்ளனர். இது நைட்ரஜனை உருவாக்குவதாக மட்டுமின்றி அதிக அளவில், அமோனியா உற்பத்தி செய்வதற்கான கிரியா ஊக்கியாகவும், செயல்படுகிறது.
நைட்ரஜன் கரைசல் விஷயம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், இந்த புதிய அணுகுமுறை பிஎன்ஏஎஸ் எனும் தேசிய அறிவியல் அகாடமியின் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்