நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுப் பிரதமர் பாராட்டு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையானது, பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை பற்றி ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சாதாரண மக்கள் எவ்வாறு அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதையும் வாழ்க்கை வசதிகள் எவ்வாறு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார். "
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இருந்த போதும் மற்ற மூத்த அரசியல் தலைவர்கள் பார்வையில் இந்த உரை குறித்த கருத்தாக “எனது அரசாங்கம் எல்லா வர்க்கங்களுக்கும் பாரபட்சம் இன்றி செயல்படுகிறது” -என உரை.
2020 இல் 102 பில்லியனர்கள்.
2022 இல் 166 பில்லியனர்கள்.
இன்னொரு பக்கம் வருமான இழப்பு, வேலை பறிப்பு. விவசாயிகள் தற்கொலை.
இது பாரபட்சம் தான். என்பதே பல தலைவர்கள் கருத்தாகும்.
கருத்துகள்