முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திர விடுதியில் ஜெ தீபா மகளுக்கு பெயர்சூட்டும் வைபவம்

முன்னால் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  ஜெ.தீபா இவர் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கும் அவரது தண்டணை அபராதத்தின் கடனுக்குமான இரண்டாம் தரப்பு வாரிசுதாரராகவே பார்க்கப்படுகிறார், 


இவர் ஜெயலலிதா உயிருடன்  இருந்த காலத்தில் பேட்ரிக் என்ற நபரை மாதவன் என்ற பெயரில் திருமணம் செய்தவர் அதற்கு அப்போது ஜெ.ஜெயலலிதாவின்  ஆதரவில்லை, அவரது உறவுகள் அப்போது சசிக்கலா நடராஜன் சார்ந்து  அவரோடு வாழ்ந்து வந்தவர்களே,    தற்போது ஜெயலலிதாவின்  இரண்டாம் தரப்பில் வாரிசு என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக தீபா மக்களால் ஜெயலலிதா மரணத் தருவாயில் அறியப்படும் நபராவார், அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது, அதை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம் சென்று பார்து வந்த நிலையில்  தீபாவின் குழந்தைக்கு பெயர்சூட்டும் விழாவை நடத்தத் திட்டமிட்டு அவர் ஒரு அழைப்பிதழ் அடித்தார் அதில் கவிதை என்ற பெயரில் அவர் எழுதிய கவிதையும் உள்ளதில்,  அரசியல் பிரபலங்களை அழைத்து பெயர் சூட்டு விழா நடத்தினார், 


நேற்று ஜெ.தீபா- மகளுக்குப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அழைப்பிதழில் இடம் பெற்ற கவிதையை எழுதியவர் ஜெ.தீபா என்று அச்சிடப்பட்டிருந்தது. 



. அரசியல் பிரபலங்கள் உள்ளிட அறிமுகமான  பல தரப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ஜெ. தீபா. குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தலில் பணியிலிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைச்  சந்தித்து பத்திரிகைக் கொடுத்தார். “அரசியல் காரணங்களுக்காக அல்ல. குடும்ப நிகழ்ச்சிக்காக அவர்களை அழைத்திருக்கிறேன்” என்று தீபா கூறிய நிலையில், நேற்று 5-ஆம் தேதி இந்தப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது,



ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்குக் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை அவரது  பிறந்த நாளான நவம்பர் 10-ஆம் தேதி அறிவித்தார் தீபா.

அழைப்பில் அழைப்பிதழில் உள்ள கவிதை என்று கூறும்  வரிகள் இது  

“கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் என் மகள். என் அத்தையின் ஆசீர்வாதம், என் அம்மாவின் ஆசீர்வாதம், மாதவனின் அம்மா ஆசீர்வாதத்தால்தான் இந்த வாழ்நாள் சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தாய்மையில் பூரித்துப்போனேன். இந்த நேரத்தில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பது நாங்கள்தான்” என்று  வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று  சென்னை தியாகராயநகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அழைப்பிதழில்.


"கீதையின் பொருளாக எது நடக்க இருக்கின்றதோ

அது நன்றாகவே நடக்கும்.

புல்லாங்குழலின் இசையாக

மயிலிறகுபோல் இதமாக இம்மண்ணில்

பாதங்கள் பதிக்க வந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

இல்லறமே நல்லறமாய்

மங்காத நட்சத்திரமாய்

ஒளி சேர்க்கவந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

தாய்மை என்ற சொல்லுக்கு

என் வாழ்வில் அர்த்தம் அளித்து

அம்மா அப்பா என்று நீ அழகாய்

குறும்புகள் செய்ய காத்திருக்கிறோம்.

அருமை மகளே நீ

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க"கவிதை எழுதியது திருமதி ஜெ.தீபா மாதவன் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது.



அந்த விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாம் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.

வாழ்த்துகள் . ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு!சந்தேகமே வேண்டாம் ஜெயலலிதாவின் வாரிசு தான்  நீதிமன்றமே கூறிய நிலையில் யாரும் மறுக்க முடியாது  அதான் அவரது அத்தை சொத்து ஒரு இரண்டாம் தரப்பு வாரிசுக்கு வந்து விட்டதே அந்த தீபா தீபக் இருவரிடமும் ஜெயலலிதாவிற்ற்கு விதிக்கப்பட்ட. அபராதத்துக்கு வசூல் செய்யவேண்டுய நிலை வருகிறது 

நீதிமன்றம் கூறும்  ஒரு தீர்ப்பு இது. 

"குற்றவாளி உயிரிழந்துவிட்டாலும் நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை அவரின் சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை  உரிமை கோருபவர்களிடமிருந்தோ வசூலிக்க வேண்டும்" - எனும் தீர்ப்பு வருகிறது கர்நாடக உயர்நீதிமன்றம் 

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டிலே கவுடா என்பவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்திய வழக்கில் அவருக்கு 29 ஆயிரத்து 204 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதன் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது வாரிசுகள் யாரும் வழக்கை மேற்கொண்டு நடத்த முன் வராததால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு சொந்தமான சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை உரிமை கோருபவர்களிடமிருந்தோ அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆயிரம் தற்குறி ஜால்ராக்கள்  ஆதரவைக் காட்டிலும் ஒரு புத்திசாலியின் பகை

வலிமையானது. என்பதை முன்னால் சட்ட அமைச்சரும் தற்போது பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கில் வந்த தண்டனை 

ஆயிரம் அறிவிலிகள் ஆதரவை விட ஒரு  அறிவாளியின் எதிர்ப்பு வலிமையானது என்பதை உறுதிப்படுத்திய நீதிபதி குன்ஹா தீர்ப்பு அதை உறுதி செய்த உச்சநீதிமன்றம். முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணிக்கும் வரை  வெளியில் யாரென்று தெரியாதவர்கள் தீபாவும் தீபக்கும். இப்போது அததைக்கு விரிக்கப்பட்ட அபாரதம் செலுத்துவார்கள் ..அதாவது கவர் டு த ஆர்டர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...