முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழ.நெடுமாறன் தகவலும் இலங்கை இராணுவ மறுப்பும் நேதாஜி இறுதி நிலை போலவே உள்ளது

பிரபாகரன் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியோடு இந்தத் தகவலை வெளியிடுகிறேன். விரைவில் தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடுவார்”


– என்று தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவரான அவரோடு நீண்டகாலம் நெருங்கிய தொடர்பில் இருந்தவராகக் கருதப்படும் பழ.நெடுமாறன்.

தற்போதைக்கு இந்தச் செய்தி பரபரப்பானாலும்.


பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன. அதில் சிலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.

புலி அமைப்பு கரிகாலனுக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவராகக் கருதும்  வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் இத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். “விரைவில் மக்களுக்கு முன் அவர் தோன்றுவார்” எனச் சொல்லியிருக்கிறார்.



இலங்கையில் முன்னாள் நாதாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமும் “கரிகாலனின் உடல் கிடைத்ததாகச் சொன்ன இலங்கை அரசு அவருடைய உடலை என்ன செய்தது? எங்கு அடக்கம் செய்தது? அவருடைய அஸ்தியை ஏன் வெளியுலகிற்கு அறிவிக்கவில்லை?


கரிகாலன் பெற்றோரின் அஸ்தி சேகரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால் கரிகாலனின் அஸ்தியை இலங்கை அரசு தந்திருந்தால், அவருடைய பெற்றோரின் அஸ்தியுடன் ஒப்பிட்டு அது கரிகாலனாது தானா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இலங்கை அரசு இதுவரை அப்படிச் செய்யாத நிலையில் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை அவர் நீண்ட கால அரசியல் வாதி நல்ல புத்திசாலி என்ற வகையில் நம்புகிறோம்.

இந்தச் செய்தி உண்மை என்றால் இது இலங்கை அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடும்.” என்றிருக்கிறார்.

கரிகாலனை நேரில் சந்தித்திருக்கிறவர்களில் ஒருவர்  கொளத்தூர் மணி போன்றவர்கள் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை மகிழ்வுடன் வரவேற்றிருக்கிறார்.

கரிகாலன் முன்பொருமுறை மறைந்ததாகச் செய்தி வெளியிட்ட போது, அவர் உயிருடன் இருப்பதாகச் செய்தி வெளியிட்டது ஒரு அரசியல் வார இதழ்.



தற்போதும் அதைப் போன்று  கரிகாலன் நலமாக இருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன்.

இலங்கையில் தமிழர்களின் இனப்போராட்டம் நீண்டகாலமாக நீடித்து வந்திருக்கிறது. தமிழர்கள் பலருடைய உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

அதிலும் – 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் நாற்பதாயிரம் பேரை இலங்கை அரசு கொன்று குவித்த வரலாற்றுப் பயங்கரம்

கணக்கில்லாமல் கொத்துக் கொத்தாக எத்தனை தமிழர்களின் உயிர்கள் பலியாயின?  தமிழ்ப் பெண்களில் எத்தனையோ பேர் சொல்லவொண்ணாத பாலியல் வன்முறைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்தார்கள்?

எவ்வளவு தமிழர்கள் காணாமல் போன பட்டியலில் சேர்ந்தார்கள்?

எத்தனை தமிழர்கள் வீடற்று, நாடற்றவர்களாக மாறிப்போனார்கள்?

பதுங்கு குழிகளும், ஷெல்களும், கொத்துக் குண்டுகளும், எந்நேரமும் மனதில் உறைந்திருக்கும் மரண பயமும், கலங்கடிக்கும் கதறல்களுமாக ஏன் தமிழர்களின் வாழ்க்கை அப்போது மாறிப் போனது?

இந்த நூற்றாண்டில் நமக்குப் பக்கத்திலுள்ள நாட்டில் இவ்வளவு உயிர்கள் – தமிழ் மொழி பேசுகிறவர்கள் என்கிற மொழியின வேறுபாட்டை மட்டும் முன்னிறுத்திக் கொல்லப்பட்டதைக் கேட்கும் போது, பன்னாட்டுத் துணையுடன் வேட்டையாடப்பட்டதை காட்சி ஊடகங்கள் சில அப்போது அம்பலப்படுத்திய போது, நம்முடைய மனங்கள் பதைத்தன.  நம் கண்கள் பனிக்கின்றன.

இதை முன்பே எதிரொலித்தவர் கரிகாலன்.

தமிழர் போராட்டம் துளிர் விட்டபோது “ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தராக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திருக்காது” என்று சொன்னவர் அவர் தான்.

“உலகின் எந்த ஒரு மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும் போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த போதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும் போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது பலருக்கும்  வேதனை தருவது” 

– இதைச் சொன்னவரும் கரிகாலன் தான்.

எப்போதும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்தவர்கள் அப்படியே சரிந்திருப்பதில்லை.

விழ வைத்த சூழல் மீண்டும் எழவும் வைக்கும்.

தற்போது இலங்கையில் அதற்கேற்ற சூழல் கனிந்திருக்கிறது என்றே தெரிகிறது. 

முன்பு தமிழர்கள் மட்டும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

தற்போது சிங்கள மக்களும் எழுச்சியுடன் போராடுகிறார்கள். சிங்களத் தலைவர்கள் நாடு கடந்து போக வைத்திருக்கிறார்கள்.

போராட்டம் இனப்பாகுபாடுகளை மீறித் தற்போது கடந்திருக்கிற நிலையில் தான் பழ.நெடுமாறனின் கரிகாலனின் இருப்பு குறித்த தகவல் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

இலங்கை அரசியல் இனி எத்தகைய திசை நோக்கி நகரும்?




கரிகாலனுக்கு மிக நெருக்கமான ஆலோசகராக இருந்தவரான ஆன்டன் பாலசிங்கம் கரிகாலன் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.

“இன்னல்களும், இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத நம்பிக்கையுடன் செயலாற்றுவது தான் கரிகாலனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்”

சரி… கரிகாலனே எதிர்பாராத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாமா?

“அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை”

“மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது”

“இழப்புகளுக்கு அஞ்சினால் போரை நடத்த முடியாது. இழப்புகளை வளர்ச்சியின் ஈன்றுகோலாகக் கருத வேண்டும்”

“இழப்புகளும், அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துள்ளோம்.

அழிவுகள் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கி விட முடியாது”

“நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்”.

“இயற்கை என் நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி"-மேதகு.பிரபாகரன் என்கிறார்

பிரபாகரன் இல்லை என 2009 ஆம் ஆண்டு முதல் பலர் சொல்லி வருகிற நிலை. அன்று அவர்களைத் துரோகி என்றவர்கள் 2009 ஆண்டு முதல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனச் சொல்லும் பழ.நெடுமாறனை இப்போது துரோகி என்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு வரை புலிகளின் நிழலில் வலம் வந்த தமிழீழ ஆதரவாளர்கள்.இன்று 70 பதுகளில் பேசிய இந்து மகா சமுத்திர அரசியலை பேசுகின்றனர்.

நெடுமாறனின் இன்றைய அறிக்கையை வாசிக்கும் ஒரு இளந்தாரி பிரபாகரன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான மோதலில்  இந்தியாவுக்காக சீனாவை ஆதரித்த இலங்கை அரசை எதிர்த்து போர் செய்தார் என்றே புரிந்து கொள்வார்கள். லட்சம் மக்கள் இனப்படுகொலைக்குள்ளான, பல்லாயிரம் பேர் காணமல் போன இந்த 14 ஆண்டுகளில் வராத பிரபாகரன் இனி வந்து எதற்கு?  பிரபாகரன் இயல்பது இல்லையே? இந்த நிலையில் பழ நெடுமாறன் தெரிவித்த தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்தார்.

அவர் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடமுள்ளது. 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி இறுதிக்கட்டப் போரில் அவர் கொல்லப்பட்டார். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள். இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.

ஆக மொத்தம் இந்த அறிக்கை ஒரு அரசியல் பார்வை மட்டுமே. இதேபோல் நம்நாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 'மர்மமான' மரணம் தொடர்பான பல வினாக்கள் 1945 ஆம் ஆண்டு முதல் எழுப்பப்படுகின்றன.

பிரிட்டானிய இராணுவம், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், ஜப்பான் அரசாங்கம் மற்றும் நேதாஜி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகள், விபத்தின் போது நேதாஜி கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், பின்னர் அதே நாளில் மருத்துவமனையில் இறந்ததாகவும் அதே முடிவை எட்டியது.  வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, நேதாஜி 1945 ஆம் ஆண்டு அன்று தைஹோகுவில் (ஜப்பானிய தைவான்) விமான விபத்தில் இறந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...