முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹா சிவராத்திரி மஹிமை குலதெய்வ வழிபாடு முறை பழமையானது

    " சிவனின் பாதங்களை தன் தலையில் தாங்கியவர்கள் " அந்தண அரசன் இராவணன் முதல் பலருண்டு


பக்தி என்பது ஒரு அறம்.

பக்தி நெறியில் முழுமையாக தன்னை ஆட்கொண்டவர்கள், தாங்கள் செய்யும் செயலில் அறம் தவறுவதை அனுமதிக்கமாட்டார்கள்.

அரசன் முதலான அனைவருக்கும் இது பொருந்தும்.தான் கொண்ட பக்தியினை வெளிக்காட்டுவதும் அவசியமாகிறது.

இன்று சிவராத்திரி என்பதால்.. சிவன் மேல் கொண்ட நேசத்தால் தங்கள் சிவபக்தியை வெளிகாட்டும் அரசர்கள். பலர் அதில் நாம் முதலில் கண்ட இடம் குடுமியான் மலை  சிஹா(முடி) கிரி (மலை) ஈஸ்வரா (சிவன்) ஆலயத்தில் ராவணன் சிலை கண்டது. குடுமியான்மலைக் குன்றில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
பூஜைக்கிருந்த பூவை எடுத்து அங்கு வந்த பக்தரான ஒரு பெண்ணுக்கு அர்ச்சகர் கொடுத்துவிடவே, கோயிலுக்குள் மன்னர் வந்ததும், செய்வதறியாது அந்தப்பெண்ணிடமிருந்து மீண்டும் அந்தப் பூவை பெற்று பூஜை செய்து மன்னருக்கு வழங்கிய பூவிலிருந்த முடி குறித்து மன்னர் அர்ச்சகரிடம் கேட்டதற்கு சிவனின் தலையில் முடி இருப்பதாக பதில் கூறிய அர்ச்சகர்.வாக்கு உண்மையாக்கிய சிவன்  மன்னருக்கு மெய்சிலிர்க்கும் வகையில் குடுமியுடன் லிங்கம் காட்சியளித்ததால் இக்கோயில் குடுமியான்மலை, சிகாநாதசுவாமி (சிகா- குடுமி) என்ற பெயரில் அழைக்கப்படுவதாக வரலாறு.

மிகவும் அழகிய சிற்பங்களால் வடிக்கப்பட்ட இக்கோவிலில் ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அணியொட்டிக்கால் மண்டபம், தசாவதாரம் முதலிய சிற்பங்களுடன் அரிய தகவல்களை தருவிக்கும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள், குடவரைக்கோயில் என பல சிறப்புகள் உள்ளதில் குடவரைக் கோயிலின் தென்பகுதியில் உள்ள கர்நாடக சங்கீத விதிகள் குறித்த கல்வெட்டு இந்தியாவிலேயே இங்குதான் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இராசசிம்ம பல்லவன் தன்னை சிவசூடாமணி என்று அழைக்கிறார். சிவனையே ஒரு அணியாக தன் தலையில் அணிந்துகொண்டாராம்

மூன்றாம் நந்திவர்மன் தன்னை .. ஹரசரண சேகரன் என்று அழைத்தார். சிவனின் பாதத்தை தவையில் தாங்குகிறாராம்.

இந்த சிவன் கோவிலுக்கு வருகைதந்து கோவிலைப் பாதுகாத்து பராமரிப்போரின் பாதங்களை தன் தலைமீது தாங்குவேன் என்கிறார் மன்னர் பராக்கிரமபாண்டியன்.

மன்னர் இராஜேந்திரசோழரோ தன்னை சிவசரணசேகரன் என்று அழைக்கிறார்.
சோழப்பெருவேந்தர் இராஜராஜசோழர் ..

தன்னை சிவபாதசேகரன் என்றே அழைக்கிறார். சிவனின் பாதங்களை தன் தலையில் சேகரித்துக்கொண்டாராம்.

கும்பகோணம் அருகில் திருக்கோடிகா கோவிலிலுள்ள சிற்பம். இரண்டு பாதங்களை தன் தலைமேல் தாங்கிய அடியார் ஒருவரின் திருவுருவம். இவர் சிவபாதசேகரனான இராஜராஜர் தான் என்பது ஆய்வாளர்கள் முடிவு.

இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள். பத்து முகங்களை உடையமையினால் தசமுகன்பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை. இராவணன் - மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர் இராவணனின் மகன்கள் ஆவார்.


குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன். குபேரனுக்காக விசுவகர்மா இலங்கையில் அமைத்த அழகிய நகரத்தையும், புஷ்பக விமானத்தையும் இராவணன் கைப்பற்றி ஆண்டார். இராவணன் சாம வேதத்தில் நிபுணன். அதை  இராமாயணமே கூறுகிறது. தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாக. மத்தியப் பிரதேசம், குசராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமாக பிஸ்ராக் என்கிற.  டில்லியின் கிரேட்டர் நொய்டா அருகிலுள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்தவர் எனும் கருத்துமுள்ளது. இராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவராகக் கூறும் கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.                                               அரியும் சிவனும் ஒன்று


சைவ சமயக் குரவர்கள் அறுபத்து மூவர். ஆழ்வார்கள் பன்னிருவர். அனைவருமே தமிழர்கள்.  ஆதி சங்கரரும் அப்போதைய காலத்தில் தமிழரே. இது போன்று வடக்கில் பிறந்தோர் யாரும் உளரா? என்பது எழு வினா?

வைணவத்தின் சைவத்தின் தோற்று வாய் தெற்கு தான். களவாடியது வடக்கு. கதை கட்டியது தானே  வடக்கு. இன்றளவும் வடக்கை நம்புகிறவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தானே, மாதாமாதம்  தேய்பிறையில் 14 ஆம் நாள் சிவராத்திரி வரும்  ஆனால்

மாசி மாதம் தேய்பிறையில் 14 ஆம் நாள் கிருஷ்ணபக்ஷ் சதுர்தசியில் வரும் சிவராத்திரி சிறப்புடையது. காரணம் அன்று ஜோதிப் பிழம்பான எம்பெருமானை திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடி தோற்றநாளாகும்.

மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது முதன்மை சிவராத்திரியானது. இந் நாளில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். “சிவபஞ்சாயதனம்”கைக்கொண்டவர்கள் இரவில் பூசையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவனழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் சிவகதி மோட்சம்  அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை சிவலோகபதவியாக அவரை வைத்தே  ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவின் மகிமை மிக்க "மஹா சிவராத்திரியாகும்.


சிவராத்திரியில்  கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்க முழுமையான இறையருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் கைகூடும். 

விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்ய வேண்டும். அடுத்தநாள் காலையில் குளித்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.


சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் திருவைந்தெழுத்து மந்திரத்தை கூறி பூசை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று இலிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின்  சிந்தனையிலிருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான இலிங்க மூர்த்திக்கு நான்கு சாமங்களிலும் திணை மற்றும்  திரவிய வாசனாதிப் பொருட்களால் அபிஷேகம் செய்து


ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று பிறப்புப் பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான பரமேஸ்வரனுக்கு அர்ச்சிக்கச்  செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் மக்களை  உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய இலிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் இலிங்க மூர்த்திக்குச் செய்யும் அபிடேகமும் வில்வார்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பராய்துறை மேவிய பரன் சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். சிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் தரித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூஜித்ததற்குச் சமம். அவ்வாறு  விரதமிருந்து வர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.


சிவராத்திரியிலஹ விரதமிருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தப் பெருமானின் கோளறு பதிகம். இது மனத் தைரியத்தைத் தரும். எந்தக கிரகங்களின் தாக்கமிருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப்  படித்தாலும், கேட்டாலும் அல்லது முற்றோதல் செய்தாலும்  அதிகப் பலன்கள் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திரம் உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு சிவன் கோவிலில்  அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்:


சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் அது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும் நற் பலனையும் வழங்கும். உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும். தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை பூஜை செய்யும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

 மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உருத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாய நம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து வணங்க வேண்டும். கலச பூசையுடன் இலிங்கத்தை வைத்தும் பூசை செய்யலாம்.

பூசை செய்ய இயலாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவராத்திரியில் பூஜை நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுவதில்.

முதல் சாமம்: இந்த முதல்கால பூசை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்குச் செய்யும் இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், பசுஞ்சாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிறப் பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவில் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்புப் பொங்கல் நிவேதனமாகப் படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூசை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூசிப்பதால் நம் பிறவி கர்மாக்களிலிருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: பூஜையை காக்கும் தேவன்"விஷ்ணு". சிவபெருமானுக்குச் செய்யும் பூஜையாகும். இக் காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு அணிவித்தும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பும்  பாயசமும் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூசை யசுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படும் காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: பூஜை சக்தியின் வடிவமாக உமையவள் தேவி பராசக்தி  அம்பாள் பூஜிப்பதாகும். இந்தக் காலத்தில் தேனபிஷேகம் செய்தும் பச்சைக் கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள்ளும் அன்னமும் "நிவேதனமாகப் படைத்து, இலுப்பெண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.இந்த காலத்திற்குரிய சிறப்பென்றால் இதை இலிங்கோத்பவ காலமென்றும் இந்தக் காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலும், மகாவிஷ்ணு வராக ரூபமாக கீழுள்ள பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடைய இக் காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமலிருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இக் கால பூசை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூசிப்பதாகும். குங்குமப்பூ சாற்றி, கரும்புச் சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவினால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூசைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் மக்கள் அடைவோமாக,


சிவராத்திரி  விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, நாள் முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்கல்ம்  பகலில் நித்திரை கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து கொண்டு ஈசனை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். 


நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும் பேற்றை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூஜை முடித்த பிறகு தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும்.

எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினால். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வரென்றும் சர்ப்ப தோசம் நீங்குமென்றும் நம்பப்படுகிறது.பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த நாளும் இதுவாகும்.

கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:

அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம் வில்  (அஸ்திரம்,அம்பு) பெற்றது.திண்ணப்பர் (கண்ணப்ப நாயனார்) தன் கண்களையீந்து முத்தி பெற்றது. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்

சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி

மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் அருள் தரும் தெய்வம் அருள் பெறுவீர்குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு


குலமென்றால் குடும்ப பாரம்பரியம். ஒரு வம்சத்தின் குல தெய்வம் 13 ஜென்மத்துக்கு வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடரும். குலதெய்வம் தெரியாமல் எந்தப் பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தாலும் பலனில்லை. எனவே எப்பாடு பட்டாவது குலதெய்வத்தினைக் கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினைச் செய்து வர வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் குலதெய்வக் கோவிலுக்கு செல்ல வேண்டும். குல தெய்வத்தை வழிபட தனியாகச் செல்லாமல் நம் உற்றார், உறவினர் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. 

நாம் மற்ற சில கோவில்களுக்கு செல்லும் பொழுது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வதிற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட வேண்டும். 

 குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தியும் வழிபடலாம். சிலர் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து மாவிளக்கு ஏற்றி வைத்தும் வழிபடுவார்கள்.

நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தை நாம் தொடங்கினாலும் அதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. குழந்தை பிறந்தால் அதற்கு மொட்டை அடித்து காது குத்துவதை குலதெய்வ கோவிலில் வைக்கிற நிலை. நடுகல் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியது. 'குலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழு அமைப்பு. இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர். தன் குலத்தின் முன்னோர்களில் சிறந்து விளங்கியவர்களையும்,குல மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் தெய்வமாக பாவித்து வணங்கி வழிப்பட்டனர். இவ்வழிபாடு ஒவ்வொரு குலத்திற்கும் மாறுபடும்.   நாடுமுழுவதும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில்         நேற்றும் இன்றும்  குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார் .


குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பிப்ரவரி மாதம் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

மதுரை மற்றும் கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பிப்ரவரி 19-ஆம் தேதி உதகமண்டலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடையே  உரையாற்றுகிறார். அதற்கிடையில்  மதுரையில் இந்தியக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு மதுரையில் அருள்மிகு அங்கயற்கண்ணி மீனாட்சி அம்மனை தரிசித்து  மக்கள் சார்பில்   வேண்டிக் கொண்டார்.மஹா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்மஹா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மகா சிவராத்திரியின் மிகச் சிறப்பான நாளில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

 நாட்டு மக்கள் அனைவருக்கும் மஹாசிவராத்திரியின் எல்லையற்ற நல்வாழ்த்துக்கள். எங்கும் நிறைந்த சிவன்!  " எனக் கூறியுள்ள நிலையில்   நாம் கண்ட 50 வருட சிவராத்திரி தற்போது மாறுபட்ட நிலை உணர்கிறோம் நாம் மட்டுமல்ல நமது சம காலத்தவர் கருத்தும் அதுவே,                                     எங்கள் மக்களில் பெண்கள்  ஔவையார் சாமிக் கும்பிடவும், குலசாமி கோவிலில் பொங்கல் வைக்கவும் தான் கண் விழிப்பார்கள்.சென்னையில் தான் மசான கொள்ளை என்ற பெயரே கேள்விப் பட்டிருப்போம்.

2010-2015-க்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பெருகியதும் ஜக்கியும் நித்தியும் அண்ணபூரணிகளும் வளர்ந்து இப்போது நிறுவன சிவராத்திரிகள் பெருகி வருகின்றன.

எல்லாம் பணம் சிலரது பதவிகள் படுத்தும் பாடு.கோயம்பத்தூரின் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

கோயம்பத்தூரின் ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை (பிப்ரவரி 18, 2023) நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவான் சிவன், அனைவருக்கும் பொருந்தக்கூடிய தெய்வம் என்று கூறினார். அவர்தான் முதல் யோகி மற்றும் ஞானி என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். சிவபெருமான் கருணை உள்ளம் பொருந்தியவராக இருந்த போதும் ருத்ரன் என்ற மற்றொரு பெயரின் காரணமாக மிகுந்த பயத்தை ஏற்படுத்தும் தெய்வமாக புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார் என்று திருமதி திரௌபதி முர்மு கூறினார். அந்த வகையில் இரண்டு விதமான சக்திகள், படைப்பாற்றல் மற்றும் அழித்தலின் சின்னமாக அவர் கருதப்படுகிறார். அவரது அழிக்கும் ஆற்றல் உண்மையிலேயே பிரபஞ்சத்தின் மீட்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.பாதி ஆணும், பாதி பெண்ணுமாக அர்த்தநாரீஸ்வரர் என்ற வடிவத்திலும் சிவபெருமான் காட்சி தருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கும் ஆண் மற்றும் பெண்ணின் நிலைகளை இது உணர்த்துவதோடு இரண்டையும் சம அளவில் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

மகா சிவராத்திரி என்பது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் நிறைவடைந்து கோடை காலம் தொடங்குவதைக் குறிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அந்த வகையில் இருளை ஒழித்து ஒளியை ஊட்டும் பண்டிகையாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. முன்எப்போதும் இல்லாத வகையில் உலகளவில் சுற்றுச்சூழலியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். நம் உள்ளே இருக்கும் இருளை நீக்கி நிறைவான மற்றும் வளமான வாழ்வை இந்த மகா சிவராத்திரி அனைவருக்கும் வழங்கட்டும் என்று அவர் தெரிவித்தார்.காசியில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பிரதமர் பகிர்வுகாசியில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின்  புகைப்படங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:“மகா சிவராத்திரி என்னும் புனித நன்னாளன்று காசி நகரம் சிவபக்தியில் மூழ்கியுள்ளது... ஜெய் விஸ்வநாத்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்