மருந்து உற்பத்தி தொழிற்சாலையின் பொதுவசதி திட்டத்திற்காக ரூ.500 கோடி அளவிற்கு உதவி
2021-2022-ம் நிதியாண்டிலிருந்து 2025-26-ம் நிதியாண்டு வரை மருந்து உற்பத்தி தொழிற்சாலையை வலிமைப்படுத்த ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், மருந்து உற்பத்தித்துறை ரூ. 500 கோடி மதிப்பில் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
மருந்து உற்பத்தித்துறையைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் உள்கட்டமைப்புக்காக 8 திட்டங்களுக்கு ரூ. 54.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தமிழ்நாட்டில் ஆலத்தூரில் அமைந்துள்ள சென்னை மருந்து உற்பத்தி தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.11.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கருத்துகள்