முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்து கொள்ள சிறப்பு ரயில்

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்து கொள்ள சிறப்பு ரயில் ஏற்பாடு: மத்திய இணையமைச்சர் தகவல்


சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருச்சியில் பேரணி நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய  தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவ்சிங் சௌகான் கலந்து கொண்டார்.


நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் உரையாற்றுகையில்,

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பந்தங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் குஜராத்தில் தமிழர்களை வரவேற்க பிரதமர், குஜராத் முதலமைச்சர் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.


 தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர்,

 பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் அடிப்படையில்,  சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், நம்முடைய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று கூறிய அவர், இங்கு புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் போலவே சோமநாத் ஆலயம் விளங்குகிறது. இதனை காண இரண்டு ரயில்கள் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் குஜராத்தின் நிதித்துறை அமைச்சர் திரு கண்ணுபாய் கலந்துகொண்டார்.சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க 17 ஆயிரம் பேர் முன்பதிவு: மத்திய இணையமைச்சர் தகவல்

சேலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ், குஜராத் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெகதீஷ் விஸ்வகர்மா, குஜராத் காந்தி நகர் மாவட்ட ஆட்சியர் செல்வி. பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த மத்திய இணையமைச்சர்,

 மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்  கலாச்சார நடைமுறைகள் மேலும் இந்தியக் கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

மேலும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 8 இடங்களில் இன்று ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார். மேலும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குஜராத் அரசு நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் தமிழகம் மற்றும் குஜராத் இடையே மிகப்பெரிய ஒருங்கிணைப்பு உருவாகும் என்று கூறினார்.

நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கிடும் வகையில்  நாட்டிலேயே முதலாவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதி மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பிரச்சினை இல்லாத வகையில் அமைய உள்ள இந்த பூங்காவில், நீர் மறுசுழற்சி, ஆயத்த ஆடைப் பூங்கா, நெசவாளர்களுக்கான பொது சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

சேலத்தில் ஜவுளிப்பூங்கா தொடங்கப்படுவது குறித்து  தமிழக அரசிடம் இருந்து முன்மொழிவு வந்த பிறகு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...