தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டம்
தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் திரு கே ஆர் எம் ராஜேஷ்குமார் எழுப்பிய வினாவுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். வருடாந்திர ஜல்சக்தி இயக்கம், மழைநீர் சேமிப்பு இயக்கம், அம்ருத் 2.0, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
தண்ணீர் மாநில அரசின் பொறுப்பு என்பதால் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட தண்ணீர் சேமிப்புத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன என்றும், பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் மத்திய அரசும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தண்ணீர் தொடர்பான திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்ற நிலையில், மத்திய அரசு தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்