கர்நாடகாவில் 11 தொகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் - அரசு அறிவிப்பு.
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும் நிலையில், அங்கு பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தின் சட்ட மன்றத் தேர்தல் வாக்கு சேகரிப்புப் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரமாக நடந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் போட்டிபோட்டுக் கொண்டு வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தனர். காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக வக்குமிடையே ஆட்சியைக் கைப்பற்றும் போட்டி தீவிரமாகவே இருந்தது.
இந்த நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடந்து முடிந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மத்தியில் பலத்த மோதலானது.
அதில் பலர் காயமடைந்தனர். எனவே, பாஜ்பே, காவூர், மூட்பித்ரி, சூரத்கல் மற்றும் மங்களூரு ஊரகக் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட 11 சட்டமண்றத் தொகுதிகளில் இன்று முதல் மே மாதம் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலிலிருக்கும் என்று மங்களூரு ஊரகக் காவல் நிலைய எல்லை சட்டம் ஒழுங்கு DGP யான அன்ஷு குமார் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்