முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தஞ்சாவூர் ஏகோஜி ஆட்சியும் மாரட்டிய வீர சிவாஜியின் பங்களிப்பும்

 தஞ்சாவூரை கைப்பற்ற பிஜப்பூர் சுல்தான் முகமது அடில்ஷாவின் படைத்தலைவராக இருந்த சாகாஜி போஸ்லே – துக்காபாய்க்குப் பிறந்த வெங்கோஜி என்ற ஏகோஜி. இவர் சத்ரபதி


சிவாஜியின் சிற்றன்னை மகனும்,இளைய தம்பியுமாவார். தந்தை சாகாஜி போஸ்லேவின் மறைவிற்குப் பின் வெங்கோஜி என்ற ஏகோஜி பெங்களூருவின் ஜாகிர்தாரராக, பிஜப்பூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.



சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி என்ற ஏகோஜி ஜனவரி மாதம் 1676 ஆம் ஆண்டில் தஞ்சாவூர்  நாயக்கர்களின் அரசாட்சியை வீழ்த்தி, தன்னை தஞ்சாவூர் மன்னராக அறிவித்துக் கொண்டவர் வெங்கோஜி என்ற ஏகோஜி  இறந்த ஆண்டு குறித்து பலவிதமான கருத்துகள் உள்ளன.

வெங்கோஜி என்ற ஏகோஜியின் மகன் முதலாம் சாகுஜி, மதுரை நாயக்கர் அரசிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, மதுரை நாயக்கர்களையும் வென்றார். இதனால் மதுரை நாயக்கர்களின் பிடியிலிருந்து விடுபட்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தன்னாட்சியுடன் ஆண்டார்.   வெங்கோஜி என்ற ஏகோஜியின் காலத்தில் தஞ்சாவூர் அரசில் சமஸ்கிருதமும்  தெலுங்கும்  இலக்கியங்களில் வளர்ச்சி அடைந்தது. மேலும் தெலுங்கு மொழியில் இராமாயணமும் இயற்றப்பட்டது.  வீர சிவாஜி மராட்டிய சமஸ்தான ஆட்சியாளராவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என அழைக்கப்படுகிறார். மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவராவார். பீஜாப்பூர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார். இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாகும். 1674 ஆம் ஆண்டு அலுவல்  ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார். சிவாஜியின் தந்தை சாகாஜி போன்சலே தக்காணச் சுல்தானகங்களிடம் பணியாற்றிய ஒரு மராத்தியத் தளபதியாவார்.  வெங்கோஜி என்ற ஏகோஜி தஞ்சாவூர் மராட்டிய அரசின் நிறுவனர் 1674 -ஆம் ஆண்டு முதல் 1684. ஆம் ஆண்டு வரை  ஆட்சியில் 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை வீழ்ந்த தஞ்சாவூர் மராட்டிய அரசு, 1855 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 ஆம் ஆண்டு முடிய விளங்கியது. தஞ்சாவூர் மாராட்டிய மன்னர் சிவாஜி ஆண் வாரிசின்றி 1855 ஆம் ஆண்டில் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசுகளற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.





நாயக்கர் மன்னர்களை வீழ்த்தி .தஞ்சாவூரை  ஆண்ட தனது தனது தந்தையின் மூத்த மனைவியின் மகனாகிய தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியை வீழ்த்த முகலாய  ஔரங்கசீப்பைக் புலி நகத்தால் கொன்ற வீர சிவாஜி மெட்ராஸ் ராஜதாணி வந்து சோழர் தேசம்  வந்தார் என்பது தான் வரலாறு.

வீர சிவாஜிக்கு ஏழு மனைவிகள்.

முதலாவது .சயீ பாய்

இரண்டாவது .சோயரா பாய்

மூன்றாவது .புத்தளி பாய்

நான்காவது .காசி பாய்

ஐந்தாவது .சுகுணா பாய்

ஆறாவது.சக்கர்வார் பாய்

ஏழாவது .குண்வந்தி பாய்

தனது ஆட்சியை நீடிக்க வீர சிவாஜிக்குப் பணம் தேவைப்படுகிறது.




தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோஜி ஆட்சி செய்யும் பகுதியில் ஒரு பகுதி வருமானத்தைக் கேட்டு கொள்ளிடம் நதிக்கரையில் திருமழப்பாடி அருகே முகாம் அமைத்துத் தூது அனுப்புகிறார். அதற்கு வெங்கோசி என்ற ஏகோஜி தர மறுக்கிறார். தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியோடு துறையூர் பகுதியில் யுத்தம் நடத்துகிறார். அப்போதய படை எடுப்பில் காட்டு மிருகங்களை விரட்டி வேட்டையாடக் கூட்டிவரப்பட்டவர்கள் தான் தற்போதய நரிக்குறவர்கள் இறுதியில் கொள்ளிடம் வடபகுதியைக் கைப்பற்றுகிறார். இரகுநாத் பந்த் என்பவரை அப்பகுதிக்கு பொறுப்பாக்குகிறார்.

பிறகு வெங்கோஜி என்ற ஏகோஜி மனைவியின் சமாதான முயற்சியால் வீர சிவாஜி வெற்றி பெற்ற பகுதிகளை தம்பி வெங்கோசி என்ற  ஏகோஜிக்கே விட்டுக் கொடுக்கிறார். 1674 ஆம் ஆண்டு முதல் 1680 ஆம் ஆண்டு வரை ஆறாண்டுகள் மட்டுமே ஆண்ட வீர சிவாஜி 1680 ஆம் ஆண்டில்  மரணமடைகிறார்.


வேலூர், செஞ்சி, கடலூர், திருமழப்பாடி ஆகிய இடங்களுக்கு வீர சிவாஜி வந்த வரலாற்று ஆவணங்கள் இன்றும் தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இருக்கிறது. வீர சிவாஜி சென்னை வரவுமில்லை. காளிகாம்பாளை வழிபடவுமில்லை. அதற்கான வரலாற்று ஆவணங்களும் இல்லை.

சுதேசிமித்திரனில் வெளிவந்த பொய்யான  கதையே வீர சிவாஜி சென்னை வந்தார் என்ற கதை.

அப்படியே வந்தாலும் அவர் நோக்கம் அப்போதய சென்னை மாகாணத்தைக் கொள்ளையடிப்பதும், தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோசியை தோற்கடிக்கவே 

தஞ்சாவூர்-மதுரையை ஆண்ட நாயக்கர்களைக் கொன்று குவித்த, மராட்டியர்களைப் பற்றியும் 

வெங்கோசி என்ற ஏகோஜியின் வாரிசு துக்கோஜியால் பழிவாங்கப்பட்ட இராமநாதபுரம் சேதுபதியின்  வரலாறையும் பேசுவேண்டிய தருணம் இது.

வீர சிவாஜி இறந்தது 1680.ஆம் ஆண்டில்  பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இன்றய கொல்கத்தா வழியாக வாரன் ஹோஸ்டிங் தலைமையில் இந்தியாவில் நுழைந்தது. பின் 1757. ஆம் ஆண்டு (பிளாசிப் போர்)... பின்னர் எப்படி வீர சிவாஜி.  பிரிட்டாணிய கிழக்கிந்திய  ஆங்கிலேயர்களுடன் சண்டை போட்டிருப்பார் ஔரங்கசீப் யுத்தம் தான் அவரை மற்றும் ரஜபுத்திரர்களைத் தைரியமூட்டியது ஆனால் வீர சிவாஜி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் யுத்தம் செய்யவில்லை என்பதே உண்மை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...