முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1000 கோடி வரை நிதி மோசடியில் சிக்கிய ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவு

1000 கோடி வரை நிதி மோசடியில் சிக்கிச் சிபிஐ விசாரணையிலுள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவு 


நிதி மோசடியில் சிக்கிச் சிபிஐ விசாரணையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. திவாலான ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனின் ஏர்செல் அக்ஸெல் ஷைன் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூபாய் 393 கோடி கோடியும் பின்லாந்தைச் சேர்ந்த வின் விண்ட் ஒய் நிறுவனத்திற்கு ரூபாய். 322 கோடியும் ஐ.டி.பி.ஐ வங்கி கடனாக வழங்கியிருந்தது. கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததால் ஐடிபிஐ வங்கிக்கு ரூபாய்.1,715 கோடி நஷ்டம் ஏற்பட்டது தொடர் பாக சிவசங்கரன் மீது கம்பெனி சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.



ஏற்கனவே வெளிநாடு தப்பிச் சென்ற சிவசங்கரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில்,  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல சில அதிகாரிகள் அனுமதி அளித்திருந்த போதும் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டிஸை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.



இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்து விசாரித்த நீதிபதி, ‘‘மனுதாரர் மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. சில வழக்குகளில் சாட்சி விசாரணையும் நடைபெற்று வருகிறது. மனுதாரர் சென்னையில் எந்த நிரந்தரமான முகவரியையும் கொடுக்காமல் மனு தாக்கல் செய்துள்ளார்.



சிபிஐ தரப்பில் மேல் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. மனுதாரரை வெளியே விட்டால் விசாரணை நீர்த்துப்போய்விடும். கடுமையான பொருளாதார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்த வழக்கில் பெரிய அளவில் பணம் சம்மந்தப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என மனு தள்ளுபடி செய்யப்படுவதாக’  உத்தரவிட்டார். அதனால் ரூபாய்.715.40 கோடியை மோசடி செய்த வழக்கில் தொழில் அதிபர் சிவசங்கரன் வெளிநாடு செல்ல முடியாது. வெளிநாடு சென்றால் அவர் மீண்டும் திரும்ப மாட்டார் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான பொருளாதார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்ற நீதிபதி கருத்துடன் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில் ஒரு உண்மை அறியவேண்டும். நாட்டில் எங்கே எந்த தவறு நடந்தாலும் சிபிஐ விசாரிக்கலாம்.  உரிமை உள்ளது. சமீபத்தில் நடந்த கோர ரயில் விபத்து குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உரிமை உள்ளது.

ஆனால் சிபிஐ நல்ல முறையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நல்ல முறையில் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியுமா? என்பது  தான் எழு வினா .

சிபிஐ செயல்பாடுகள் குறித்தும்  நிலுவையிலுள்ள சிபிஐ வழக்குகளின்  பரிதாபகரமான நிலைமை குறித்தும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) ஆண்டு அறிக்கையை  விபரத்தை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

 அறிக்கையின் படி, டிசம்பர் மாதம்  31, 2021 வரை, சிபிஐயால் விசாரிக்கப்பட்ட  6,700 ஊழல் வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் நிலுவையிலுள்ளன. 

அதில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும்,

10 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 20 ஆண்டுகள் வரை 1,939 வழக்குகளும்,

 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை 2,273 வழக்குகளும்,

மூன்றாண்டுகளுக்கு மேல் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை 811 வழக்குகளும்

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக நிலுவையிலுள்ள வழக்குகள் 1,399 ஆகும்.

சிபிஐ நீதிமன்றத்தில் முடிவுற்ற வழக்குகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மட்டும் 10,974 மேல்முறையீடுகள் மற்றும் சீராய்வு மனுக்கள் நிலுவையிலுள்ளன. 

மொத்தம் 9,935 மேல்முறையீடுகளில், 9,698 உயர் நீதிமன்றங்களிலும், 237 உச்சநீதிமன்றத்திலும்,

உயர் நீதிமன்றங்களில் 1,039 சீராய்வு மனுக்கள் நிலுவையிலுள்ளன.

இவையனைத்தும் நடத்த வேண்டிய பொறுப்பு சிபிஐயிடம் தான்  உள்ளது.‌

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 10,974 மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்களில், 

361 இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவும்

15 க்கும் மேற்பட்ட ஆனால் 20 ஆண்டுகளுக்கு குறைவாக நிலுவையில் உள்ளவை 558. 

1,749 வழக்குகள் 10 க்கும் மேற்பட்ட ஆனால் 15 ஆண்டுகளுக்கு குறைவாகவும் நிலுவையில் உள்ளன, 

3,665 வழக்குகள் ஐந்திற்கு மேல் ஆனால் பத்தாண்டுகளுக்கு குறைவாக நிலுவையில் உள்ளது.‌

2,818 வழக்குகள் இரண்டுக்கு மேல் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக நிலுவையிலுள்ளது.  

1,823 வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக நிலுவையிலுள்ளது.

645 ஊழல் வழக்குகள் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணையில் நிலுவையில் உள்ளன, 

இதில் 35 வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

இதெல்லாவற்றையும் வாதாடி முடிக்க சிபிஐக்கு மேலும் 50 ஆண்டுகள் தேவைப்படும்.

2021 ஆம் ஆண்டில் சிபிஐ 221 அரசு உயர் அதிகாரிகள் உட்பட 549 அரசு ஊழியர்கள் மீது  457 வழக்குகளை பதிவு செய்தது. இதில் 504 பேர் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பொதுவாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ஓராண்டுக்குள் சிபிஐ விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து முடிக்க வேண்டும். இதற்கு தகுதி வாய்ந்த உயர் அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சில வழக்குகளில் விசாரணைகளை முடிப்பதில் அசாதாரண காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதை ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தருணத்தில்  தாமதத்திற்கு சிபிஐ அதிகாரிகள் கூறும் சில முக்கிய காரணங்களில் முதலாவது  கோவிட்-19 தொற்று காரணமாக தாமதம்.

இரண்டாவதாக. பணி சுமை காரணமாக விசாரணையில் தாமதம்.

மூன்றாவதாக. ஆள்பலத்தின் போதாமை.

நான்காவதாக. லெட்டர்ஸ் ரோகேட்டரிக்கு (எல்ஆர்) பதில்களைப் பெறுவதில் தாமதம். அதாவது அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல் அல்லது ஆதாரத்திற்காக வெளிநாட்டு நீதிமன்றத்தின் மூலம் கோரிக்கையை வைக்கும் ஆவணங்கள் பெறுவதில் உள்ள தாமதம்..

ஐந்தாவதாக. தொலைதூர இடங்களில் வாழும் வழக்கின் சாட்சிகளைக் கண்டுபிடித்து விசாரணைக்கு கூட்டி வந்து செல்வதில் அதிக நேரம் போகிறது.

இவை தவிர வேலியே பயிரை மேயும் கதையாக குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான 75 வழக்குகளும் நிலுவையிலுள்ளன. சிபிஐ அதிகாரிகள் மீது நிலுவையிலுள்ள வழக்குகளை ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் நிலுவையிலிருப்பது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பின் நற்பெயரையும் பிம்பத்தையும் பிரதிபலிக்கிறது.

31-டிசம்பர்-2021 ஆம் நாள் நிலவரப்படி, குரூப் ஏ அதிகாரிகள் மீது 55 துறை சார்ந்த வழக்குகளும், குரூப் பி மற்றும் சி அதிகாரிகள் மீது 20 வழக்குகளும் சிபிஐ அதிகாரிகள் மீது பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ளன.

சிபிஐ 2021 ஆம் ஆண்டில் 747 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது -- 680 வழக்கமான வழக்குகள்  மற்றும் 67 ஆரம்ப விசாரணைகள். 

இந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதற்காக 102 வழக்குகளும், வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக 40 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது தவிர குறைந்தபாடில்லை.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக CBI ன் பணியின் மீது CVC மேற்பார்வை செய்கிறது.

747 வழக்குகளில், 133 வழக்குகள் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் பேரிலும், 37 வழக்குகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகளின் பேரிலும் எடுக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டில் 676 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், 798 R C க்கள் மற்றும் 86 B E க்களில் விசாரணை இறுதி செய்யப்பட்டது. 

31.டிசம்பர் .2021 ஆம் நாள் நிலவரப்படி, 328 வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக்காக நிலுவையில் உள்ளன.

இப்படி மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் செயல்பாடுகள் உள்ளது. போடப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து தொடர் இழுவையில் உள்ளது. இதெல்லாம் சரி செய்ய முடியாத நிர்வாகம்  சிபிஐ வழக்குகளை மேன்மேலும் அதிகரிப்பது சிபிஐயின் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும். 

அரசியல்  காரணங்களுக்காக மேலும் மேலும் வழக்குகளை சிபிஐ தலையில் கட்டுவது என்பது சுமை தான் 

சிபிஐ தனது பணியை சரியாக செய்ய வேண்டுமென்றால். பாஜக அரசு சிபிஐயின் தலையாயப் பிரச்சினைகளை முதலில் சரி செய்ய வேண்டும். இல்லையெனில் சிபிஐ பணிச்சுமையை மேலும் அதிகரிப்பதாகவும் சிபிஐ அமைப்பை தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு பகடைக்காயாக பயன்படுத்துவதாகவே ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.