தமிழகத் தேர்தல் அரசியல் களம் என்பது பாஜக எதிர் பிற கட்சிகள் என்ற நிலைக்கு மாறி விட்டதா என மக்களின் எழுவினா
தமிழகத் தேர்தல் அரசியல் களம் என்பது பாஜக எதிர் பிற கட்சிகள் என்ற நிலைக்கு மாறி விட்டதா? என்ற வினா எழ தமிழ்நாடு வந்துள்ள
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரைச் சந்திக்கும் நபர்களில் சில திரையுலக பிரபலங்களும் அரசியல் தொடர்பாளர்களும்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நபர்களில் ஆந்திரப்பிரதேச மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தொழில் அதிபர்களான திரைப்படத் தயாரிப்பாளர் பூலாங்குறிச்சி அபிராமி ராமநாதன்,
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சமுத்து உடையார் என்ற பாரிவேந்தர், மற்றும் அவரது மகன் ஐஜேகே தலைவர் ரவி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், ஆற்காடு நவாப் முகமது அலி, முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டி , இந்தியா சிமிண்ட்ஸ் .டி.வி எஸ் .சீனிவாசன், பி.ஆர்.ராஜன், அப்பல்லோ மருத்துவமனை பிருந்தா ரெட்டி,பத்மஸ்ரீ விருது பெற்ற வீராங்கனை அனிதா பால்துரை, விஜயகுமார் ரெட்டி, வேல்ஸ் ஐசரி கணேஷ், செட்டிநாடு சிமிண்ட்ஸ் அய்யப்பன் என்ற எம் ஏ எம் ஆர் முத்தையா செட்டியார்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பிரபலங்களை சந்திக்கும் அமித்ஷா மக்களவை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்தாரென்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவரது வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் எனவும் இரண்டு பிரதமர் வாய்ப்பை திமுகவால் தமிழ்நாட்டில் இழந்து விட்டது எனவும் சாடியிருந்தார். இந்நிலையில் தான் திமுக உடனடியாக பதில் கொடுத்துள்ளது,
மத்தியில் கடந்த 2014 ஆமத ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடந்தி வருகிறது. அன்று மதல் 9 ஆண்டுகளாக பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் தான் மத்தியில் 9 ஆண்டு ஆட்சி நிறைவடைந்ததுள்ள நிலையில் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடத்துகிறது. மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெறுகிறது.
மேலும் சென்னை கோவிலாம்பாக்கம் தனியார் மண்டபத்தில் அமித் ஷா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிடட கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‛‛தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம். தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் பிரதமர் ஆவதை தவற விட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களைத் தவற விட திமுக தான் காரணம்'' என்றார்.திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், ‛‛பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இல. கணேசன். தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை பிரதமர் ஆக்குங்கள் அதோடு இன்னும் ஒரு ஆண்டு தேர்தலுக்கு இருக்கிறது. இதனால் தற்போது கூட இல. கணேசனை மாநிலங்களவை உறுப்பினராக்கி பிரதமராக்கலாம். அவர்களை யார் தடுத்தது?'' என பரிந்துரைத்து கேள்வி எழுப்பினார். மேலும் ‛‛ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்றெல்லாம் பேசியவர் அமித்ஷா. இப்போது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் இப்படி பேசுகிறார்" என டிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளார் அமித்ஷா தமிழ்நாடு வருகை இதுவரை மூன்று முறை ஏதோ சில முக்கிய காரணங்களால் நடக்கவில்லை. அப்பதெல்லாம் பாஜகவுக்கு பணமுடிப்புத் தந்த புரவலர்களுக்கு ஒரு வழியாக சந்திக்க ஒரு சந்தர்ப்பம் தந்துவிட்டனர் என்று தகவல் பேசப்படுகிறது இதில் ஆந்திர மாநில அரசியல் இரண்டாம் கட்டத் தலைவராகவும் அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜாவின் கணவர் சந்திப்புத்தான் தற்போது அரசியல் பேச்சாகிறது எப்படி... கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிகரமான தோல்வி மாதிரியா? தமிழ்நாட்டில்
ஒன்னுக்கே வழியைக் காணோமாம்... இதுல 25 கேட்குதாம்... என்ன தான் கனவுதான்னாலும் ஒரு லாஜிக் வேணாமா என மக்கள் பேசுவது நம் காதிலும் விழாமல் இல்லை.
கருத்துகள்