ரூர்க்கி ஐஐடி-ல் கார்பன் மற்றும் காற்றுமாசில்லா வளாகத்தை நோக்கிய முன்னெடுப்பு
ரூர்க்கியில் உள்ள மத்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடி-ல் கார்பன்-நடுநிலை மற்றும் காற்று மாசு இல்லாத வளாகத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக பெட்ரோல்-டீசல் அடிப்படையிலான வாகனங்கள் இல்லாத ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இம்முயற்சி அந்த வளாகத்தில் கார்பன் தடம் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும். வளாகத்தில் தனிநபர்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இ-ரிக்ஷாக்களை பயன்படுத்துதல் போன்ற நிலையான போக்குவரத்து முறைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஜூன் 15, 2023 அன்று, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ரூர்க்கியில் ஐஐடி வளாகத்தில் பெட்ரோல்-டீசல் (புதைபடிவ எரிபொருள்கள்) இல்லாத வாகனக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை மற்றும் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த நினைவூட்டலாக உள்ளது.
மேலும் கழிவு நீர் மறுசுழற்சி, மறுசுழற்சி பரவலாக்கப்பட்ட முறையில் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றிற்காகவும் பசுமை முயற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
கருத்துகள்