முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன்மீகச் சுற்றுலா ரயில்பெட்டி மதுரையில் நடந்த தீ விபத்தில் பத்து நபர்கள் பலி பலர் படுகாயம்

செய்தியாளர்:- ஆர்.சரத்பவார்         இன்றையதினம்  அதிகாலை நேரம் 5.30 மணியளவில் ரயில் பெட்டியில் தீ விபத்து


மதுரை இரயில் நிலையம் அருகில் , கொல்லம் - புனலூர் விரைவு ரயிலிலிருந்து கழட்டி ரயில்வே டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் மூன்று  பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து பத்துப் பேர் பலி, பலர் படுகாயம்  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி லட்சுமணபுரி எனும் இலக்னோவிலிருந்து  IRCTC ஆன்மீகச்  சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாக திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு இன்று அதிகாலை 5.15 மணியளவில் வந்தடைந்த இரயில் பெட்டியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட வட மாநில  பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்திருந்தனர்.


அதில் ஒரு பயணி, பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்துத் தேனீர்  தயாரிக்க, அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்ட வெளியிலிருந்த பயணிகள் சப்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் பயணிகள் கீழே இறங்க முயன்ற நிலையில் அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதில் அந்தப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த வயதானவர்கள் கீழே இறங்க முடியாத அல்லது இயலாத நிலையில்  பலியாகினர்.



இதுவரை பத்து சடலங்களை மீட்ட மதுரை  மாநகரத் தீயணைப்புத் துறையினரும்,  பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் பத்து  சடலங்களை மீட்டுள்ளனர்.

 ஐவர் ஆண்கள், மூவர் பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் இரு நபர் என்ற நிலை

சம்பவ இடத்தில்  ரயில்வே காவல்துறையின்  & உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் & மாவட்ட வருவாய்த் துறையினர், காவல்துறை ஆணையர் மற்றும்  காவல்  துறையினர்  காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசினர் ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.


அங்கு மாநில அமைச்சர் பி. மூர்த்தி  வந்து விபரங்களைக் கேட்டறிந்தார்.  அதன் பின் அமைச்சர் பி டி ஆர்  பழனி வேல் தியாகராஜன் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் 'அழாதீங்க அவங்களுக்கு ஏதும் ஆகாது .என கண்ணீர் விட்டழுத பயணிகளை ஆரத்தழுவி அமைதிப்படுத்தினார்'  இதில் பொதுவாக வட இந்திய மக்கள்  பாவம் தான் ; போதிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ,பொருளாதாரமேம்பாடோ  பெறாத மக்கள்.ஆகவே தான்  தொடர்ந்து சில கட்சிகள் மட்டுமே அங்கு வெற்றி கொள்ள முடிகிறது.           


                    MADURAI JUNCTION FIRE INCIDENT : HELP LINE NUMBERS The following two help line numbers are provided at the site to share the information related to the fire incident and causalities   9360552608, 8015681915.                                  மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து!

அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடி நடவடிக்கை!

விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் 

மதுரை ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்புதுறை ஆணையர் செளத்ரி விசாரணை மேற்கொள்வார் - எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவு



மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஐஆர்சிடிசி டூரிஸ்ட் கோச் இன்று காலை 5.15 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது குறித்து, பெங்களூரு தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துவார்.

நாளை காலை 9.30 மணியளவில், மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் விசாரணை தொடங்கும். சம்பவம் மற்றும் விஷயம் தொடர்பாக  அறிந்தவர்கள் ஆதாரங்களை வழங்க விரும்பினால் டிஆர்எம் அரங்கில் அவற்றை வழங்கலாம். எழுத்துபூர்வமாக தெரிவிக்க விரும்புவர்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம்,  ரயில் சன்ரக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு எழுதலாம் என தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதில் பொது நீதி யாதெனில் இரயில் பெட்டிக்குள் பரவும்படி தீ பம்ப் ஸ்ட்வ் அடுப்பைப்  பயன் படுத்தி சமையல் செய்து பத்துப் பேர் மாண்டு போயிருக்கின்றனர். பலருக்கும் காயம். கொள்ளையர்கள் வரக் கூடுமென்று இரயில் பெட்டியை பூட்டி வேறு வைத்திருக்கின்றனர்.இப்படி ஒரு சூழல் தமிழர்கள் வாழ்வில் எப்போதும் நடக்காது.



 தென்னர் தம் வாழ்வும், கலாச்சாரமும் பன்பாடும்  வேறு வேறு என்பதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...