தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆறு மையங்களில் 5,233 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதியதில் பெண் தேர்வர்களுக்கான மையத்தில், தேர்வெழுதிய வேட்டவலம் பகுதி லாவண்யா (வயது 23) முறைகேட்டில் ஈடுபட்டதாப் பிடிபட்டார். தேர்வு எழுதிய போது, திடீரென்று எழுந்து தேர்வறைக் கண்காணிப்பாளரிடம், ‘நான் கர்ப்பமாக உள்ளேன். கழிவறைக்குச் செல்ல வேண்டும்’ என்றார். தேர்வின் விதிமுறைப்படி யாரையும் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஆனால், லாவண்யா கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னதால், தேர்வறைக் கண்காணிப்பாளர் கழிவறைக்குப் போக அவரை அனுமதித்தார்.
ஆனால் 20 நிமிடம் நேரமாகியும் வெளியே வராததாலும், லாவண்யா அமர்ந்திருந்த இடத்தினருகில் அவரின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இல்லாததையும் கண்டுபிடித்த தேர்வறைக் கண்காணிப்பாளர் சந்தேகமடைந்து, இரண்டு பெண் காவலர்களை கழிவறைப் பகுதிக்கு அனுப்பிவைத்து, லாவண்யாவிடம் சோதனை நடத்த உத்தரவிட்டார். அப்போது, லாவண்யா வினாத்தாளையும், விடைத்தாளையும் மறைத்து வைத்திருந்தைக் கண்டுபிடித்து வரிடமிருந்த செல்போனைக் கைப்பற்றிச் சோதித்ததில், வினாத்தாளை செல்போனிலுள்ள கேமரா மூலம் பிகைப்படம் எடுத்து, சென்னை காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரியும் அவரது கணவர் சுமனின் தொலைபேசி வாட்ஸ்அப் எண்ணுக்கு லாவண்யா அனுப்பியதை. சுமன், அவரது நண்பர்களாகிய விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாராகப் பணிபுரியும் சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொத்தகுளம் கிராமத்தில் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் பிரவின்குமார் ஆகியோருக்கு வினாத்தாள்களை அனுப்பியிருக்கிறார். அந்த மூன்று பேரும் சேர்ந்து, கூகுளில் விடைகளைத் தேடி, சரியான பதில்களைக் கண்டுபிடித்து லாவண்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு உடனுக்குடன் அனுப்பியிருக்கின்றனர்.
லாவண்யாவும் கழிவறையிலிருந்த படியே விடைத்தாளில் குறித்துக் கொண்டது, விசாரணையில் தெரியவந்தது. அதன் பின் அது குறித்து, வெறையூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து மேல் விசாரணை நடத்திவந்தனர்.
கருத்துகள்