மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு
வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு அமைச்சகம் (எம்.டி.என்.இ.ஆர்) மற்றும் வடகிழக்கு கவுன்சில் சார்பில் (என்.இ.சி) பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மணிப்பூருக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ.363.14 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, இதில் ரூ.114.99 கோடி 2020-21 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் ரூ.145.24 கோடியும் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.65.18 கோடியும் 2023-24 ஆம் ஆண்டில் (ஜூன் 2023 வரை) ரூ.37.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
2023ஜூன், 30 நிலவரப்படி, வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4.55 கோடி ரூபாய் பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளன. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 9.46 கோடி ரூபாய் பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளன. இதுதவிர, வடகிழக்கு கவுன்சில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8.36 கோடி மதிப்பிலான பயன்பாட்டுச் சான்றிதழ்களும், வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26.15 கோடி பயன்பாட்டுச் சான்றிதழ்களும் 2023 மார்ச் 31 வரை நிலுவையில் உள்ளன.
மாநில அரசுகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும் முகமைகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு (ஐ.ஏ.எஸ்) வழக்கமான சந்திப்பின் மூலம் செலவினங்கள், திட்டங்களின் வேகம் மற்றும் நிதி பயன்பாடு உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன.
இத்தகவலை மத்திய வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்