இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய கலை கட்டிடக்கலை வடிவமைப்பு நிகழ்வுக்கான லோகோ வெளியீடு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய கலை கட்டிடக்கலை வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 க்கான தொடக்க நிகழ்வை கலாச்சார அமைச்சகம் நேற்று மாலை தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் நிகழ்வுக்கான லோகோ வெளியீட்டுடன் ஏற்பாடு செய்தது.
நிகழ்வில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய கலாச்சாரம், சுற்றுலா துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, கலாச்சார அமைச்சகம் சார்பில் இந்திய கலை கட்டிடக்கலை வடிவமைப்பு நிகழ்ச்சி 2023-ஐ டிசம்பரில் நடத்துவதாக அறிவித்தார், தில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் இந்த நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இது வெற்றி பெற அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கலைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள், கேலரிகள் மற்றும் அருங்காட்சியக வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்