உலக கால்நடை சுகாதார அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஆணையத்தின் 33-வது மாநாடு புதுதில்லியில் இன்று தொடங்கியது – மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர்கள் திரு சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் திரு எல் முருகன் பங்கேற்றனர்
உலக கால்நடை சுகாதார அமைப்பின் (டபிள்யூ.ஓ.ஏ.ஹெச்) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஆணையத்தின் 33-வது மாநாடு புதுதில்லியில் இன்று (13-11-2023) தொடங்கியது. இந்த மாநாடு நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் தொடக்க அமர்வுக்கு மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு சஞ்சீவ் குமார் பல்யான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மற்றொரு இணையமைச்சர் திரு எல். முருகனும் பங்கேற்றார்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்தியா உட்பட 36 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தனியார் துறை மற்றும் தனியார் கால்நடை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 24 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். மற்றவர்கள் காணொலி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் உலக கால்நடை சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் மோனிக் எலோயிட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். டபிள்யூ.ஓ.ஏ.ஹெச்-ன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பாவ்சு ஹுவாங், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா ஆகியோரும் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துகள்