ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் .ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரானவர் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார்சம்பாய் சோரனுக்கு 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.
81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு . ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியிலிருந்து வருபவர் சம்பாய் சோரன்.
தற்போது ஜார்கண்ட் மாநில அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக உள்ளார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி. இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசிக்கிறார்.
"எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியின் அரசு மத்திய அமைப்புகளைக் கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.சோரன் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராவார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு முடிய பதவி வகித்தவர். இவரது தந்தை சிபு சோரன் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர். இவரது மனைவி கல்பனா சோரன்.
ஹேமந்த் சோரன் 2010 முதல் 2013 வரை முதலமைச்சராகவும்; சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையும் ஜார்க்கண்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் .நிலம் மற்றும் பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஏழு முறை அழைப்பாணை விடுத்தது , தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அரசு நிலக்கரிச் சுரங்கங்களை தனது பெயருக்கு குத்தகைக்கு ஒதுக்கிய காரணத்தினால், இந்தியத் தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய கடந்த 26 ஆகஸ்டு 2022 ம் தேதியன்று ஜார்கண்ட் மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் 28, 29-ஆம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாகவே திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனிக் காரில் ரகசிய வழியில் வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய்.36 லட்சம் ரொக்கம், சொகுசுக் கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் பிற்பகலில் அமலாக்கத் துறை யினர் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டதனால் ராஞ்சியில் பதற்றம் நிலவுகிற நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றனர். இதைக் கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்பதற்கான ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் ஜேஎம்எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார்.
முன்னதாக, அமலாக்கத் துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் டெல்லியிலுள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறை சட்ட விரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அது குறித்து ராஞ்சியிலுள்ள மூத்த காவல்துறை அதிகாரி சந்தன் குமார் சின்ஹா தெரிவித்ததாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். தனது பெயருக்கும், தங்கள் சமூகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செயல்பட்டதாகவும், எந்த விதமான முன்னறிவிப்புமின்றி டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்ததாகவும், தன்னைப் பற்றி பொய்யான தகவலை பரப்பியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் கபில் ராஜ், தேவ்விரத் ஜா, அனுபம் குமார், அமன் படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் கூறினார். முதல்வர் ஹேமந்த் சோரன் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது
மேலும் தான் கைது செய்யப்பட்டால் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க, ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அந்தத் தகவலை ஹேமந்த் சோரன் மறுத்தார். இந்நிலையில்தான் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ரகசியமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி சம்பய் சோரனை, ஹேமந்த் சோரன் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ரகசியக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து முதல்வர் பெயரை குறிப்பிடாமல் ஆதரவுக் கடிதங்களையும் ஹேமந்த் சோரன் பெற்றுள்ளார்.
ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதல்வராக ஏற்பதற்கு ஜேஎம்எம் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததனால் தான், மனைவியை முதல்வராக்காமல், தனது நண்பர் சம்பய் சோரனை முதல்வராக, ஹேமந்த் சோரன் தேர்வு செய்துள்ளாரென ஜேஎம்எம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான சம்பய் சோரன். செராய் கெல்லா தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பய் சோரனுக்கு 67 வயதாகிறது. இதுவரை 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். .திருத்தப்பட்ட சட்டம் ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டம், 2018 ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் 1988 ஊழல் தடுப்புச் சட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. வலுவான சட்டக் கட்டமைப்பை வழங்குவதன் மூலமும், குற்றங்களை வரையறுப்பதன் மூலமும், கடுமையான தண்டனைகளை நிறுவுவதன் மூலமும், ஊழல் நபர்களை பொறுப்புக்கூற வைக்க இந்த சட்டம் உதவியுள்ளது. ஊழலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் கருவியாக இருந்தாலும், சவால்கள் நீடிக்கின்றன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, விசாரணைகளில் தாமதத்தை குறைத்தல் மற்றும் ஊழல் வழக்குகளில் அரசியல் தலையீடு பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவை இந்த சவால்களில் அடங்கும்.
சரி பழங்குடியினர் மேலிருந்து மூன்றாவதாக உள்ளனர். அவர்கள் மதமே அது தானா என்பது எழு வினா?
சரி கூட்டமாக இருக்கும் ஹிந்துக்கள் நாட்டிற்கும் கீழிருந்து நான்காவது இருக்கும் கிறுத்துவ நாடுகளுக்கும் எது பலமும் அதிகாரமும் பொருளாதாரமும் உடையதாக உள்ளது? என்பதே உலக அரசியலை தாங்கிப் பிடிக்கும் சர்னா என்பது இயற்கை வழிபாட்டையொட்டிய ஒரு மதத்தை ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பின்பற்றுகின்றனர்.ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா தனது தேர்தல் அறிக்கையில் சர்னாவை மதமாக அங்கீகரிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஜார்கண்டில் மொத்தம் 32 பழங்குடியினப் பிரிவுகள் உள்ளதில் 8 பழங்குடியினர் பலவீனமான பழங்குடிப் பிரிவுகள் ஹிந்துக்கள் ஆவார்கள், சிலர் மட்டுமே கிறித்துவ மதத்துக்கு மாறினர்” என ஹஜாரிபாக் பல்கலைக் கழக மானிடவியல் பேராசிரியர் ஜி.என்.ஜா கூறுகிறார். ரஜி பாதா சர்னா பிரதான சபாவின் தர்ம குருவான பந்தன் திக்கா என்பவர் ஜார்கண்டில் 62 லட்சம் சர்னா பழங்குடியினர் இருப்பதாகவும், ஜார்கண்டில், 2011 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்கள் தொகை 8.6 மில்லியனாகவும், இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 26.2 சதவீதமாகும்.
எண் அடிப்படையில், ஜார்கண்ட் மாநிலம் நாட்டிலேயே 12 ஆவது பெரிய பழங்குடி மக்கள்தொகையைக் கொண்டது, இது இந்தியாவின் மொத்த பட்டியல் பழங்குடி மக்கள்தொகையில் 8.3 சதவீதமாகும்.
இதில் பொதுநீதி யாதெனில் :- ஊழல் செய்த ஒரு மாநில முதல்வர் தன்மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத் துறையினர் மீது ஜாதிய ரீதியான வழக்கை பதிவு செய்வதால் தப்பிவிடலாம் என மாநில காவல்துறையை நாடியது தவறான நிகழ்வாகவே எதிர் கால வரலாறு கூறும்.
கருத்துகள்