முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் ஊழியர் வாரிசு ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமை- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்துடன் கூடிய ஒரு முன்னோடி முடிவில், பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நிறுவப்பட்ட விதியை அரசு திருத்தியுள்ளது

மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது

மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியை அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய இணையமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை  வழங்க அனுமதிக்கிறது.

விவாகரத்து நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு இந்த திருத்தம் தீர்வு காணும் என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மனைவியின் தகுதியின்மையைப் பொறுத்து  அல்லது அவரது மறைவுக்குப் பிறகு மட்டுமே தகுதி பெற்றனர். இருப்பினும், புதிய திருத்தம் பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோர அனுமதிக்கிறது.

இந்த நடவடிக்கையைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆயுதப் படைகளில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம் அல்லது நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு திருத்தம் என ஒவ்வொரு துறையிலும் பெண் செயல்பாட்டாளர்களுக்கு சமமான, நியாயமான மற்றும் முறையான உரிமைகளை வழங்கும் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஏற்ப இந்த திருத்தம் உள்ளது என்றார்.

அலுவலக குறிப்பாணையில், பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்க வேண்டும், அந்த கோரிக்கையின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போது அவர் இறந்தால், அவரது தகுதிவாய்ந்த குழந்தை / குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டால், அதற்கேற்ப குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒரு பெண் ஊழியர் தகுதியான குழந்தை இல்லாத விதவையாக உயிருடன் இருந்தால், குடும்ப ஓய்வூதியம் மனைவியை இழந்தவருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மனைவியை இழந்தவர் சிறாரின் பாதுகாவலராக இருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாவலராக இருந்தால், மனைவியை இழந்தவர் பாதுகாவலராக இருக்கும் வரை குடும்ப ஓய்வூதியம் அவருக்கு வழங்கப்படும். குழந்தை உரிய வயதை அடைந்து, குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவுடன், அது அக்குழந்தைக்கு நேரடியாக வழங்கப்படும்.

பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் மறைந்த நிலையில் அவருக்கு கணவரும், வயது வந்த அதே நேரத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள குழந்தைகளும் இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அந்தக்  குழந்தைகள் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்களாக மாறும் பட்சத்தில், மனைவியை இழந்தவருக்கு அவர் இறக்கும் வரையிலோ அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரையிலோ இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக பிரதமர் மோடியின் கீழ் தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பொறுப்பாளரான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...