செல்ஃபோனில் வீடியோ பார்த்தால் காசு சம்பாதிக்கலாம் என்பதுபோல் ஒரு மோசடி My V 3
எனும் நிறுவனத்தின் மீது கோயமுத்தூரில் வழக்கொன்று பதிவான நிலையில், அதன் எதிர்வினையாக கோயமுத்தூர் L & T பைபாஸ் சாலையில் அந்த நிறுவனம் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாடு முழுவதிலிருந்து நேற்று அதிகாலை முதல் திடீரெனக் கூடியிருக்கின்றனர். மதிய உணவு நேரத்தில் மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கின்றது. மிகப் பெரும் எண்ணிக்கையில் பெண்களும் வயதானவர்கள்.
இந்த நிலையில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அதாவது MLM என்றாலே கோயமுத்தூர்காரர்கள் தான் எனும் நிலை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றது. திருநெல்வேலியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தி மொத்தமாக வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்திருக்கின்றனர்.
சில அறிவிப்புகளுக்குப் பிறகு, தற்போது அனைவரும் கலைந்து செல்கின்றனர் எனபதை அறிய முடிகின்றது.
இதையெல்லாம் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முன்பே அறிந்திருந்ததா எனும் கேள்வி அப்போது எழுகின்ற நிலையில்.
நிறுவனப் பெயரிட்டு இன்று தேதியில் தேடினால் ஏகப்பட்ட வீடியோ காட்சிகள் கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை இணைத்துள்ளோம்.
கருத்துகள்