அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில்
ஜனவரி 22 அன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர் திலாவை பிரதமர் பார்வையிட்டார்
நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மதப் பிரதிநிதிகள் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டனர்
2024 ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார்.
வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலய கட்டுமானத்தில் தொடர்புடைய தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர திலாவையும் பிரதமர் பார்வையிடுவார். புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்யவுள்ளார்.
பிரமாண்டமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலயம், பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி; உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளால் இது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ வடிவம் (ஸ்ரீ ராம் லல்லாவின் சிலை) வைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரதானா மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன. ஆலயத்துக்கு அருகில் ஒரு வரலாற்று கிணறு (சீதா கூப்) உள்ளது. இது பழங்கால கிணறு ஆகும். ஆலய வளாகத்தின் தென்மேற்கு பகுதியில், குபேர திலாவில், பகவான் சிவனின் பண்டைய ஆலயம் மீட்டெடுக்கப்பட்டு, ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. கோவிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க, கிரானைட் கற்களால் 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ பாதுகாப்புக்கான அமைப்பு மற்றும் ஒரு மின் நிலையம் உள்ளது. நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விரதங்களை மேற்கொண்டார் - பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று பல்வேறு மொழிகளில் ராமாயண பாராயணங்களைப் பிரதமர் கேட்டார்
2024 ஜனவரி 22 அன்று நடைபெறும் அயோத்தி தாம் ஸ்ரீ ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவுக்காக 2024 ஜனவரி 12 அன்று நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 11 நாள் விரதம் மற்றும் வழிபாட்டைத் தொடங்கினார். ஸ்ரீராமருடன் பெரிய அளவில் தொடர்புடைய நாசிக் தாம் - பஞ்சவடியில் இருந்து அவர் இந்த வழிபாடுகள் மற்றும் விரதங்களைத் தொடங்கினார்.
1. ஸ்ரீ காலாராம் கோயில், நாசிக்
2024 ஜனவரி 12, அன்று பிரதமர் மகாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள காலா ராம் மந்திரில் பிரார்த்தனை செய்து வழிபட்டார். அவர் ஸ்ரீ ராம் குண்த்-தில் வழிபாடு மற்றும் பூஜை செய்தார். ஸ்ரீ ராமர் அயோத்திக்கு வெற்றிகரமாக திரும்பியதை சித்தரிக்கும் ராமாயணப் பகுதி மராத்தி மொழியில் பிரதமருக்கு வாசிக்கப்பட்டது. துறவி ஏக்நாத் ஜி மராத்தியில் எழுதிய பவார்த் ராமாயணத்தின் ஸ்லோகங்களையும் பிரதமர் கேட்டார்.
2. வீரபத்ரர் கோயில், லேபக்ஷி, ஆந்திரப் பிரதேசம்
2024 ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை அன்று, பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தியின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். தெலுங்கு மொழியில் ரங்கநாத ராமாயணத்தைக் கேட்ட பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தின் பண்டைய நிழல் பொம்மலாட்டக் கலை வடிவமான தொள பொம்மலாட்டத்தில் சித்தரிக்கப்பட்ட ஜடாயுவின் கதையைப் பார்த்தார்.
3. அருள்மிகு குருவாயூர் கோயில், திருச்சூர், கேரளா
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும் பிரதமர் சென்று வழிபாடு நடத்தினார்.
4. திரிபிரயார் ஸ்ரீ ராமசுவாமி கோயில், திருச்சூர், கேரளா
பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 17 அன்று கேரளாவின் திரிபிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமியின் தெய்வீக இரடத்திற்கு விஜயம் செய்தார். ஸ்ரீராமசுவாமி கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிட்டுக் கலைஞர்களைப் பாராட்டினார்.
5. அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
2024 ஜனவரி 20 ஆம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி புனித ஆலயத்திற்கு வருகை தந்தார். புகழ்பெற்ற கம்பர் தமது தலைசிறந்த படைப்பை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய புனித இடமான ஸ்ரீரங்கத்தில், கம்ப ராமாயணத்தின் கவிதை பாடலையும் அவர் கேட்டார்.
6. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் பூஜை செய்த பின்னர், பிரதமர் திரு நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி புனித ஆலயத்திற்கு வருகை தந்தார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கு பக்தியுடன் மரியாதை செலுத்தி, வழிபாடு நடத்தினார். மாலையில் கோயில் வளாகத்தில் பஜனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
7. தனுஷ்கோடி கோதண்டராமசுவாமி கோயில்
இன்று (21-01-2024) தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார். தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடம் என்று கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் சென்றார். ஏன் பாலகனான இராமனுக்கு ஆலயம் அமைக்கிறார்கள்?
ஏன் பட்டம் கட்டிய, மனைவியைத் துறந்த, மீண்டும் நாட்டிற்கு வந்து பரதனிடமே ஆட்சியை வைத்துக் கொள்ள கோரிய இராமனுக்கு ஆலயம் அமைக்கவில்லை? காரணம் யாருக்கும் தெரியாததல்ல ‛சிரித்த முகம்’.. அயோத்தி ராமர் கோவிலின் 5 வயது பால ராமர் சிலை உருவானது 5 சிறப்பு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ சிரித்த முகம் கொண்ட ராமர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் இன்று பிரதிஷ்டையுடன் கூடிய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த 5 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று சடங்குகள் செய்ய உள்ளார்.
ராமர் சிலையை ‛‛மோடி'' தொடுவதா? கோபமான பூரி சங்கராச்சாரியா.. ‛‛அயோத்தி செல்லமாட்டேன்'' என சூளுரை
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்க மொத்தம் 3 சிலைகள் செதுக்கப்பட்டு இருந்தன. இதில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவ தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலையானது சிரித்த முகத்துடன் இருக்கும். கடந்த 18ம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் ராம் லல்லா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை குறித்த 10 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:இந்த சிலையானது 51 இன்ச் உயரம் 200 கிலோ எடை கொண்டது. சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி உள்ளார்.
‛சிரித்த முகம்’.. அயோத்தி ராமர் கோவிலின் 5 வயது பால ராமர் சிலை உருவானது எப்படி? 5 சிறப்பு இதுதான்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ சிரித்த முகம் கொண்ட ராமர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் இன்று பிரதிஷ்டையுடன் கூடிய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த 5 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று சடங்குகள் செய்ய உள்ளார்.
ராமர் சிலையை ‛‛மோடி'' தொடுவதா? கோபமான பூரி சங்கராச்சாரியா.. ‛‛அயோத்தி செல்லமாட்டேன்'' என சூளுரை
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்க மொத்தம் 3 சிலைகள் செதுக்கப்பட்டு இருந்தன. இதில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவ தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலையானது சிரித்த முகத்துடன் இருக்கும். கடந்த 18ம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் ராம் லல்லா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை குறித்த 10 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
இந்தச் சிலையானது 51 இன்ச் உயரம் 200 கிலோ எடை கொண்டது. சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி உள்ளார்.
இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ள கல்லின் பெயர் கிருஷ்ண ஷிலா. இது கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பல டன் எடை கொண்ட ஒற்றை கல்லில் இருந்து 200 கிலோ எடையுடன் கலைநுட்பத்துடன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தொடர்ந்து தண்ணீர், பால் அபிேஷகம் செய்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம்,பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி ஆகிய தசாவதாரங்கள் சிற்பங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி பிரம்மனும், ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன. ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.மேலும் ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.மேலும் இந்த சிலையின் மீது ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி விழுவது போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியில் விழும்படி கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பெருமிதம் மிக்க நேரத்தில் நன்றி செலுத்த வேண்டிய ஒரு ஜீவன் பிரபல தொல்பொருள் துறை நிபுனர் கே.கே. முகம்மது. நேர்மையாக தனது கண்டுபிடிப்புகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து தனது தொழில் நேர்மை மற்றும் அக நேர்மையை காட்டிய உன்னத நபர்.
கருத்துகள்