இந்தியாவின் பதினெட்டாவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும் முன்பாகவே
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அரசியல் சூடு பிடித்துள்ளது. தொகுதிகளின் மறுசீரமைப்பில் சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி மாற்றத்திற்குள்ளானதற்கு முன் திருமயம், திருப்புத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிருந்த நிலையில்
திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மற்றவை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்ததில், இதுவரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்கள் விபரம் வருமாறு:- 1967 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை காலம்சென்ற தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும்
1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பெ.தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும்
1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும்
1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும்
1991 ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும்,
1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும்
2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும்
2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பி.ஆர்.செந்தில்நாதன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும்
2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கார்த்தி ப.சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகள் ,மற்றும் கூட்டணி சார்பில் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது, பாஜக சார்பில் கூட்டணிக்கு வரவிருக்கும் அமமுகவுக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படலாம் அதனடிப்படையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் வேட்பாளராகப் போட்டியிடலாம்.
அல்லது தனித்துக் கூடப் போட்டியிடலாம். அது குறித்து இனி அறிவிப்புகள் .வரலாம் ” என டிடிவி தினகரன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவைக்கு (1999 ஆம் ஆணடு முதல் 2004 ஆம் ஆண்டு வரை) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின் அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகனென டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெ.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி மாதம் 2017- ஆம் ஆண்டில் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-ஆம் நாளில் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.
23.11.2017 ஆம் நாளன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடமிருந்தது பரிக்கப்பட்டது சின்னமில்லாத கட்சித் தலைவராக இருக்கிறார்.
21 டிசம்பர், 2017 ஆம் நாளன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பின் 15 மார்ச்சு மாதம் 2018 ஆம் நாளன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமென்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தங்கள் பிரிவினருக்கென ஒரு அடையாளம் தேவை என்பதால் இக்கட்சியைத் தொடங்கினார் திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தர் தினகரன் 13 டிசம்பர் 1963 ஆம் நாளில் பிறந்தவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளராவார் . கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகவும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். வி.கே.சசிகலாவின் அக்காளின் மகளாவார் . 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 15 மார்ச் 2018 ஆம் நாளன்று டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார் இவர் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அதிகம் வாய்ப்புகள் உறுவாகியுள்ளது, இவரை எதிர்த்து போட்டியிடப்போகும் திமுக கூட்டணி வேட்பாளர் காரைக்குடியைச் சேர்ந்தவர் கரு.பழனியப்பன் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, இவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவின் சகோதரர் மகனாவார் சின்ன கருப்பையா மற்றும் நாகம்மை பெறறோராவர், இவர்களது மூன்று பிள்ளைகளில் கரு.பழனியப்பன் மூத்தவர்.பழனியப்பன் மனைவி பியா, ஆவார் இனியா என்ற மகளும் தயா என்ற மகனும் உள்ளனர், இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில் நடுவராக நடத்தி வந்தார் நடிகர் இயக்குநர் கரு பழனியப்பன். இவர் பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை ஆகிய படங்களை இயக்கியும். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் திராவிட இயக்கச் சிந்தனையாளர். கரு பழனியப்பன் தனது நிகழ்ச்சியிலும் திராவிட சிந்தனைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கரு பழனியப்பன் தனது ட்விட்டரில் 'எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...! சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்' என்று அவர் பதிவிட்டுள்ளார். சிறந்த பேச்சாளராக அறியப்படும் கரு பழனியப்பன் திராவிட கருத்துகளை மேடைகளில் பேசி வருகிறார். அவ்வப்போது பட்டிமன்றங்களிலும் பேசுவார். சில நேரங்களில் நடுவராகவும் கலந்து கொண்டு தனது ஏற்ற கருத்துகளை இடித்துரைப்பார். இவர் மந்திரப் புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார். காரைக்குடியைச் சேர்ந்தவர் சிறு வயது முதலே தனது தந்தையின் மூலம் புத்தகம் படிக்கும் ஆவலை வளர்த்து கொண்டவர் இயக்குநர் பார்த்திபனுடன் பணியாற்றியுள்ளார். பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றார். அது போல் சதுரங்கம் படத்திற்காக சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றுள்ளார். இவர் இப்போதே திமுகவின் வேட்பாளராக அதிகம் வாய்ப்புள்ளதாக அறியப்படும் நிலையில் சிவகங்கையில் போட்டி இப்போதே கலைகட்டுகிறது பல அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது,
கருத்துகள்