பெண் இ கா ப அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு.?
"ஒரு வாரமாக வீட்டிற்கு வரவில்லை" - என தோட்டப் பணியாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர், காவல்துறையில் உயர் பணியில் இருக்கும் சக இ கா ப பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் நீதிமன்றம் மூன்றாண்டுகள் தண்டனை கொடுத்த பின்னரும் காவல்துறை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததை நீதிமன்றம் கண்டித்துக் கேள்வி எழுப்பியதால் தூக்கத்திலிருந்த கண்விழித்த பின், ராஜேஷ்தாஸை தேடிச் சென்றிருக்கிறார்கள்.
சட்டத்தை சிறிதும் மதிக்காத ராஜேஷ்தாஸ் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவலே இப்போதுதான் தெரிகிறது.
காரில் சீட்பெல்ட் போடாமல் பயணிப்பதையும், வேகமாகச் செல்வதையும் படம் பிடித்து அபராதம் விதிக்கும் கேமராக் கண்களில் இதுபோன்ற சட்டத்தை ஏமாற்றி பதுங்கி ஓடும் கிரிமினல்கள் தெரியாமல் போவது எப்படி? என்ற வினா எழாமல் இல்லை எப்படியாவது தப்பிக்க வழி தேடுகிறாரோ? முடியாது.
சாமானியனை அதிகாலையில் வீட்டுக்கதவைத் தட்டி தூக்கும் காவல்துறை கண்டிப்பாக கைது செய்வார்கள் என்று நம்புகிறோம்.
வாழ்க சட்டமும் ஜனநாயகமும். என சாமானியர்கள் பேசுவது நம் காதிலும் விழுகிறது.
கருத்துகள்