முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் மகன்கள் ரேவண்ணா,
முன்னாள் முதல்வர் குமாரசாமி இடையில் எப்போதுமே மோதல் தான்.
மண்டியா தொகுதியை குமாரசாமியும் ஹாசன் தொகுதியை ரேவண்ணாவும் 'பங்கு' போட்டுக் கொண்டது போலவே தான் அரசியல் நடவடிக்கைகள் எப்போதுமிருக்கும். ஹாசன் தொகுதிக்குள் குமாரசாமி நுழைவது கிடையாது; மண்டியா பக்கம் ரேவண்ணா போவது கிடையாது. தற்போது ரேவண்ணா மகன் பிரஜ்வல், ஆபாச வீடியோவில் சிக்கியிருப்பதும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்பதும் சித்தப்பா குமாரசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரங்கள். தற்போது பிரஜ்வல் வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம். பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மேலிடம் தான் முடிவெடுக்கும். தற்போதைய நிலையில் மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு ஜி டி தேவே கவுடா தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்கமாட்டோமென பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.300 பெண்களுடன் உல்லாசம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி வெளிநாட்டுக்கு தப்பிய வேட்பாளரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டுமென அவரது சித்தப்பா கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன்- தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளராக ஹாசனில் மீண்டும் போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக அந்த மாநிலம் தயாரான நிலையில் தான் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் சில வீடியோக்கள் டிரெண்டாகத் தொடங்கி உள்ளன.
அதன்படி பென் டிரைவ் ஒன்று மக்கள் இடையே பரவ தொடங்கி உள்ளது. அதேபோல் சில வீடியோக்களும் மக்களிடையே பரவ தொடங்கி உள்ளன. அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா உள்ளார். அதன்படி அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பதிவாகி இருக்கின்றன.
ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல ஆயிரம் வீடியோக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி கொடூரத்தில் அதிமுகவினர் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானது போல அங்கே தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் சிக்கி உள்ளது. In this கவனிக்க வேண்டிய விஷயமாகும்
ப்ரஜ்வால் ரேவண்ணாவே பதிவு செய்ததாகக் கூறப்படும் பல பெண்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் அந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்னதாகவே சுற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தற்போது பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது..
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணா ஏற்கனவே ஜெர்மனிக்குத் தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஹாசன் தொகுதியில் ஏப்ரல் மாதம் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் 300 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பரவியதால் சர்ச்சையானது. இந்த வீடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியது கர்நாடகா மாநில மகளிர் ஆணையம். இதனடிப்படையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சித்தராமையா.
அதே நேரத்தில் ஆபாச வீடியோவில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது: ஹாசன் வீடியோக்கள், தேர்தலின் போதே வெளியாகின. தற்போது எஸ்.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளியே வரும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் உண்மை என்ன என்பது தெரிய வந்ததும் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் நானோ தேவகவுடாவோ பெண்களை மரியாதையாகத்தான் நடத்துவோம். பாதிக்கப்பட்ட நிலையில் வரும் பெண்களுக்கு நாங்கள் ஆதரவாகவும் கரிசனத்தையும்தான் காட்டி இருக்கிறோம். அத்தகைய பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தான் முயற்சித்திருக்கிறோம்.
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என கூறப்படுவது என்னுடன் தொடர்புடையது அல்ல. எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் தங்களது பணியை செய்வார்கள். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிப் போயிருந்தால் அவரை திரும்ப அழைத்து வருவது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும். என்னைக் கேட்டால் பிரஜ்வலை இந்தியாவுக்கு அழைத்து தான் வரவேண்டும் என்பேன் எனத் தெரிவித்தார்.ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்துள்ளனர். ரேவண்ணா- பிரஜ்வல் வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவண்ணா வீட்டுப் பணிப்பெண் கொடுத்த புகாரில் : ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லாத போது ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரஜ்வல் என்னை அவரது அறைக்கு அழைத்த போதே சிலர் எச்சரித்திருந்தனர்.பிரஜ்வல் ரேவண்ணா ஸ்டோர் ரூமுக்குத் தான் முதலில் வரவழைப்பார். அங்கு தொடக் கூடாத இடங்களில் தொட்டு ஆபாசமாக நடந்து கொள்வார். பின்னர் சேலையின் பின்னையும் அவரே கழற்றிவிட்டு பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் என் மகளுடனும் ஆபாசமாக வீடியோ காலில் பேசத் தொடங்கினார் பிரஜ்வல். என் மகளோ குலைநடுங்கிப் போய் பிரஜ்வலின் மொபைல் எண்ணையே பிளாக் செய்துவிட்டார். அப்பாவும் மகனும் பெண்களை சூறையாடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே தற்போது பகிரங்கமாக புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அந்த பெண் காவல்துறையில்தெரிவித்துள்ளார்.ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354(A), 354 (D), 506, 509 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாலியல் தொல்லை தருதல், கிரிமினல் செயலில் திட்டமிட்டு செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளாகும்.கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக அந்த மாநிலம் தயாரான நிலையில் தான் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் சில வீடியோக்கள் டிரெண்டாகத் தொடங்கி உள்ளன.
அதன்படி பென் டிரைவ் ஒன்று மக்கள் இடையே பரவ தொடங்கி உள்ளது. அதேபோல் சில வீடியோக்களும் மக்களிடையே பரவ தொடங்கி உள்ளன. அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா உள்ளார். அதன்படி அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பதிவாகி இருக்கின்றன.
ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல ஆயிரம் வீடியோக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி கொடூரத்தில் அதிமுகவினர் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானது போல அங்கே தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் சிக்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமாகும்
ப்ரஜ்வால் ரேவண்ணாவே பதிவு செய்ததாகக் கூறப்படும் பல பெண்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் அந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்னதாகவே சுற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தற்போது பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது..
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணா ஏற்கனவே ஜெர்மனிக்குத் தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது.கர்நாடக மாநிலத்தின் மெஜாரிட்டி சமூகம் ஒக்கலீக கௌடா ஆகும்
முன்னாள் பிரதமர்
தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா சட்டமன்ற உறுப்பினர் இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா., தங்களது பாரம்பரிய தொகுதியான ஹாசனின் பாராளுமன்ற உறுப்பினர் இப்போது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல்..
வாக்குப்பதிவுக்கு கர்நாடகா மாநிலமே தயாராகி கொண்டிருந்த நேரத்தில் தான், பிரஜ்வல ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் ஷேர் ஆகின.. ஆரம்பத்தில் இந்த வீடியோக்களை யாருமே நம்பவில்லை..
தேர்தல் சமயத்தில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாவது சகஜம் என்று நினைத்தனர்.. ஆனால், 300 க்கும் மேற்பட்ட பெண்களை பிரஜ்வல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது தான் இந்த வழக்கில், முதல் சந்தேகத்தை கிளப்பியது.
ரேவண்ணா: இப்படி ஒரு விஷயம் கசிந்ததுமே, பிரஜ்வல் ரேவண்ணா, இங்கிருந்து தப்பி ஜெர்மனியில் பதுங்கியது, இரண்டாவது சந்தேகத்தை கிளப்பியது. இறுதியில், ரேவண்ணா வீட்டுப் பணிப்பெண், ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில் கதறி அழுது, புகார் தந்திருந்தது, ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தகர்த்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
பணிப்பெண் புகாரில், "ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லை யென்றால், ரேவண்ணாவும், பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பலாத்காரம் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறர்கள்.. பிரஜ்வல் என்னை அவரது ரூமுக்கு அழைப்பார்.. ஸ்டோர் ரூமில்தான் முதலில் தன்னுடைய சில்மிஷத்தை துவங்குவார். தொடக்கூடாத இடங்களில் தொடுவார்.. சேலையில் உள்ள "சேப்ட்டி பின்"னையும் அவரே கழற்றிவிட்டு, பலாத்காரத்தில் ஈடுபடுவார்.. அப்பாவும், மகனும் பெண்களை இப்படித்தான் வேட்டையாடுவார்கள்" என்றார்
இப்போது, பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.. ஒருபக்கம், பெண்கள் பாதுகாப்பு ஆணையம் கொந்தளித்து வருகிறது.. மறுபக்கம், மகளிர் காங்கிரஸ் ஆவேசமாகி உள்ளது..
இதற்கு நடுவில் ஜேடிஎஸ் கட்சியை சார்ந்த பெண்களே விக்கித்து போயிருக்கிறார்கள்.. ஒட்டுமொத்தமாக, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்து கொண்டிருக்கின்றன.. பிரஜ்வல் ரேவண்ணாவின் போட்டோக்களை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கசிந்த ஆபாச வீடியோக்களில் பிரஜ்வல் முகம் தெளிவாக தெரியவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், உதவி கேட்டு சென்ற தங்களை பிரஜ்வல் தவறாக பயன்படுத்தி கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும் போது வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டுவதாகவும், சில பெண்கள் கன்னட சேனல்களுக்கு பகிரங்கமாகவே பேட்டி அளித்திருப்பது, கர்நாடக அரசியலில் மிகுந்த பரபரப்பை தந்துவருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்கள் திடீரென வந்த விவகாரம் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. சில மாதங்களுக்கு முன்பேயே, கட்சிரீதியாக அனைவருக்குமே தெரிந்திருக்கின்றன.. அதனால்தான், ஜேடிஎஸ் கட்சியை பாஜக கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளகூடாது என்று கடந்த 5 மாதங்களுக்கு முன்பிருந்தே, மாநில பாஜகவுக்கு "அழுத்தங்கள்" தரப்பட்டதாம்.
ஆபாச பென் டிரைவ்கள் அத்தனையும் காங்கிரசுக்கு சிக்கியிருப்பதால், எப்படியும் இதையே ஆதாரமாக வைத்து, தேர்தல் நேரத்தில் டேமேஜ் செய்துவிடும் என்பதால், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் வேண்டாம் என்றும் எடுத்து சொல்லப்பட்டதாம்.
அதுமட்டுமல்ல, பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதும் இந்த விவகாரம் வெடித்துள்ளது.. பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் தேர்தலின் போது கசியும் என்பதால், இந்த முறை பிரஜ்வலை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று பாஜக மேலிடம், குமாரசாமியிடமும், தேவகவுடாவிடமும் வலியுறுத்தியதாம்.. ஆனாலும், ரேவண்ணாவின் பிடிவாதம், தன்னுடைய மகனுக்கும் சீட்டை பெற்று தந்துவிட்டதாம்.
கர்நாடகாவில் பலம்பொருந்திய காங்கிரஸை தோற்கடிக்க வேண்டுமானால், ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி இந்த முடிவை ஆமோதித்ததாக சொல்கிறார்கள். கடைசியில், இன்று ஜேடிஎஸ் மட்டுமல்லாமல், கர்நாடகாவில் முட்டி மோதி மேலே வர துடித்து கொண்டிருக்கும் பாஜகவுக்கு, இது நெருடலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழக்கு குறித்து, கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு பிரஜ்வலின் சித்தப்பாவான குமாரசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.. அதேசமயம், காங்கிரசும் இதை விடுவதாக இல்லை..
கிராம பெண்கள்: ''காங்கிரஸ் அரசின் இலவச வாக்குறுதி திட்டங்களால், கிராம பெண்கள் வழிதவறி விட்டனர் என்று குமாரசாமி சொல்கிறாரே, இப்போது அவரது குடும்ப மகனே வழிதவறியிருக்கிறாரே? வழிதவறியது யார்? கிராம பெண்களா? உங்கள் வீட்டு மகனா? தேவகவுடா, குமாரசாமி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கறாராக கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக அரசியலையும் தாண்டி, இந்த சம்பவம் பொதுவெளியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் பிரஜ்வல்லுக்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன..
2800 ஆபாச வீடியோக்களிலும் சிக்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்கள் தான்.. குறிப்பாக, சொந்த கட்சி பெண் நிர்வாகிகள், அரசு பணியில் டிரான்ஸ்பர் கேட்டும், பதவி உயர்வு கேட்டும் உதவிக்கு செல்பவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.. இதில், வீட்டு வேலை பார்ப்பவர்களும் சிக்கி சீரழிந்துள்ளனர்.
இந்த அட்டகாசம் எல்லாம் தேவகவுடா குடும்பத்தினருக்கு முன்பே தெரியாமல் இருந்திருக்காது.. நிச்சயம் அவர்களுக்கு தெரியும்.. அதே போல அரசியல் கட்சிகளுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.. இப்படி எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், நாங்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள் கர்நாடக மாநில மக்கள்..!
கருத்துகள்