கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் 1870-ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு 2023-24-ம் ஆண்டில் சரக்கு கையாளுதலில் சாதனை
கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் அதன் 154 ஆண்டு வரலாற்றில், 2023-24-ம் நிதியாண்டில் 66.4 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது, இது 2022-23-ல் கையாளப்பட்ட 65.66 மில்லியன் டன்கள் என்ற முந்தைய சாதனையைவிட முடிவடைந்த நிதியாண்டு சாதனை 1.11% அதிகமாகும்.
உற்பத்தித்திறன், பாதுகாப்பு நடவடிக்கைகள், வணிக மேம்பாடு, ஒட்டுமொத்த திறன் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக துறைமுகத்தால் செயல்படுத்தப்பட்ட தொடர்ச்சியான உத்திபூர்வ முயற்சிகளே இந்த சாதனைக்கு காரணமாகும் என்று அதன் தலைவர் திரு ரதேந்திர ராமன் கூறினார்.
கொல்கத்தா துறைமுகத்துக்கு உட்பட்ட ஹால்டியா டாக் வளாகத்தின் கணிசமான பங்களிப்பை எடுத்துரைத்த திரு ராமன், இந்த வளாகம் 2023-24-ம் நிதியாண்டில் 49.54 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாண்டது, இதுவரை கையாண்ட அதிகபட்ச சரக்கு அளவைக் குறிக்கிறது. 2022-23-ம் நிதியாண்டில் 48.608 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அதன் முந்தைய சாதனையை விஞ்சியது. இது 1.91% அதிகரிப்பைக் குறிக்கிறது. இதற்கிடையில், கொல்கத்தா டாக் சிஸ்டம் (கேடிஎஸ்) 2022-2023-ல் கையாண்ட 17.52 மில்லியன் மெட்ரிக் டன் உடன் ஒப்பிடும்போது, 2023-24-ம் ஆண்டில் 17.052 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை நிர்வகித்தது.
2023-24-ம் ஆண்டில் துறைமுகத்தின் வலுவான நிதி செயல்திறனை தலைவர் சுட்டிக்காட்டினார். இது ரூ.501.73 கோடி நிகர உபரியை அடைந்துள்ளதாகக் கூறிய அவர், இது முந்தைய ஆண்டின் நிகர உபரியான ரூ.304.07 கோடியை விட 65% வளர்ச்சியாகும் என்றார். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.
துறைமுகத்தின் திறனை அதிகரிக்க கொல்கத்தா துறைமுகம் பெரிய அளவில் அரசு-தனியார் பங்களிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கருத்துகள்