நியோமேக்ஸ் நில மோசடி வழக்கில், அதன் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் நான்கு பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக பலவிதமான புகார்கள் எழுந்த நிலையில் தற்போது
நியோமேக்ஸ் நில மோசடி வழக்கில் துணை நிறுவன இயக்குநர்கள் நான்கு பேரைக் கைது செய்தனர்
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் துணை நிறுவன இயக்குநர்கள்
இளையராஜா, சார்லஸ், சஞ்சீவ்குமார், ராஜ்குமார்,
ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்ததன் பேரில் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை விசாரணை நடத்தியதில், ரூபாய்.260 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக நியோமேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சிராப்பள்ளி வீரசக்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 30-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
,
இந்நிலையில், நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர்கள் சார்லஸ்(வயது 50), இளையராஜா(வயது 38), ராஜ்குமார்(வயது 46), சஞ்சீவ்குமார் (வயது 46) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். நியோமேக்ஸ் நிறுவனம் தொடங்கியதிலிருந்தே சார்லஸ் முக்கிய நபராகச் செயல்பட்டுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
கருத்துகள்