பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக 50 தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக 50 தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிஎம்ஏஒய்) என்பது பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூபாய். 2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனிதவள மாகப் பெறத் தகுதியுடையவர்கள்.
அதில், தமிழ்நாடு முழுவதும் ஏழைகளுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றனா். குறிப்பாக, இந்தத் திட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 போ் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் (டிவிஏசி) வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அண்மையில் மட்டும் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக, கடந்த மே மாதம் 20-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியிலுள்ள சணபத்தூா் கிராமத்தில்
வீடுகளைக் கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி ரூபாய்,.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. மேலும், ஏற்கனவே சொந்த வீடுகளை உடைய பலர் பயனாளிகளாகத் தேர்வு செய்து இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவா்கள் பலரும் லட்சக்கணக்கான ரூபாயை மோசடியாகப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல கடந்த மாா்ச் மாதம் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூபாய். 1 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக 10 அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட முறைகேடு வழக்கு தான் மிகப்பெரிய ஊழல் வழக்காகும். பயனாளிகளுக்கு விதிகளை மீறி ரூபாய்,.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ள பயனாளிகள் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவா்கள் பலரும் லட்சக்கணக்கான ரூபாயை மோசடியாகப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
இதே போன்று பல மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் நடந்த ஊழலின் மொத்தத் தொகை ரூபாய்.2 கோடி என ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு
கணித்துள்ளதில் பெரும்பாலும் பஞ்சாயத்துச் செயலாளா்கள், தொகுதி மேம்பாட்டு அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓக்கள்), ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் பயனாளிகளாக முன்பதிவு செய்துள்ளதை ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவினா் கண்டறிந்துள்ளனா்.
அது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது: பயனாளிகளில் பெரும்பாலானோா் இந்தத் திட்டத்தில் பணம் பெறத் தகுதியற்றவா்கள். மேலும் பலா் அதிகாரிகளின் துணையுடன் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ள போதே பணி முடிந்ததாக போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளனா். இது போன்ற முறைகோடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்