திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு:
திருநெல்வேலி மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் . யார் எனக் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்தபடி, ஆனால் ஜெயக்குமார் தனசிங் அவரது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதமும் வெளியாகி பரப்பப்பாகியுள்ளது. மருமகனுக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூபாய்.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூபாய்.10 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் ”எனக் குறிப்பிட்டுள்ளார்.
"என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக் கருதவில்லை.
என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும்
என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை
காவல்துறை கண்டுபிடித்து விடுவார்கள்.நிச்சயமாக
காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.
என்மீது சுமத்தப்படுவது அபாண்டமான குற்றசாட்டு . நான் நிச்சயம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்து கொள்வேன் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கூறிய நிலையில் காவல்துறை தனியாக விசாரித்தால் உண்மை நிலவரங்கள் வெளியாகும் அரசியல் உள்நோக்கத்தின் காரணமாக நடைபெற்ற கொலை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் என்ற செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். காலையில் காணமல் போன
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அனுப்பிய மரண வாக்குமூலம் ! திருநெல்வேலியில் என்ன நடக்கிறது? என்ற உண்மையை செய்தி வெளியிட காத்திருக்கும் நிலையில், ஜெயக்குமார் தனசிங் மரண விவகாரத்தில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் கரைச்சுத்துபுதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். கான்ட்ராக்டராகத் தொழில் செய்து வந்தவருக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பாரம்பரிய காங்கிரஸைச் சேர்ந்தவர், கடந்த மூன்றாண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (வயது 28) தனது தந்தையைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர். அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்து புதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமாரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு முழு விபரங்கள் வெளி வரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலக் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜெயக்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று மாலை நடைபெற்றது. பரிசோதனை முழுக்க வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து பிரேதப் பரிசோதனை கூடத்தில் ஜெயக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அவரது உடலை திருநெல்வேலியிலிருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க உள்ளார்
இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திசையன்விளை, உவரி, கரைச்சுத்துபுதூர் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்