இந்தியக் கடற்படை கப்பல் கில்டன் புருனேயின் மூரா நகருக்குச் சென்றுள்ளது
இந்திய கடற்படை கப்பல் கில்டன் இன்று (25 மே 2024) புருனேயின் மூராவுக்குச் சென்றடைந்தது. புருனே கடற்படையால் அக்கப்பலுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் கிழக்குப் பிரிவின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணம் இரு நாடுகளின் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இந்திய கடற்படைக் கப்பல் கில்டனின் புருனே பயணத்தின்போது, தொழில்முறை கலந்துரையாடல்கள், கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை, விளையாட்டு போட்டிகள், சமூக நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். இந்திய கடற்படை மற்றும் ராயல் புருனே கடற்படைக்கு இடையிலான கடல்சார் பயிற்சியுடன் இந்தப் பயணம் நிறைவடையும்.
கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ ) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நான்கு பி-28 நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (ஏஎஸ்டபிள்யூ) கப்பல்களில், ஐஎன்எஸ் கில்டன் மூன்றாவது கப்பல் ஆகும்.
கருத்துகள்