வெள்ளையா காவியா உடை என்பது குறித்து விவாதம் தேவையா,?
இல்லறம் குறித்தும், துறவறம் குறித்தும் பாடியவர் திருவள்ளுவர் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழும் வெளியானது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக திமுக மற்றும் திக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பாக குறிப்பிட்ட போதிலும். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வழிபாடு செய்தார்.
உலகப் பொதுமறை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாகவே வரலாறு அறியலாம். அது திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோவிலும் பராமரிக்கப்படுகிறது. இக் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகப் பராமரிப்பில் உள்ளது.
வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று மே மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தீப தூப ஆராதனைகள் செய்யப்பட்டது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளே ஒரு பொது நீதி தான்.அவரது உருவம் காவியா ? அல்லது வெள்ளையா என்பதே இப்போது விவாதம்
,தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் அதனைப் பிய்த்துக்கொண்டே தான் இருக்கும். அதுபோல என்னவோ நம்முடைய கெட்ட நேரம் அது போன்று நமக்கு ஆளுநர் வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது சர்ச்சை கிளம்பியது. திருப்பி காவி உடை அணிவித்தால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது” எனத் தெரிவித்தார்".
இரண்டும் சாராத நடுநிலையாளர்கள் பார்வையில் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மதமாக இப்போது உள்ள கிருஸ்தவமோ, இஸ்லாமியமோ, பௌத்தமோ, சமணமோ இல்லை, சைவம், வைணவம், சாங்கியம், கௌமாரம்,கானாபத்யம் தான் ஆகவே வள்ளுவர் சைவம் சார்ந்தவர், அவர் வள்ளுவர் முதற்பாவலர், தெய்வப்புலவர்,மாதானுபங்கிநான்முகனார்,நாயனார்,பொய்யில்புலவர்,பொய்யாமொழிப்புலவர்,ஞானவெட்டியான்,செந்நாப்போதார்,தேவர்பெருநாவலர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பிறந்ததாகவே வரலாறு
காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்த மார்கஜெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரே மகள் வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அதனால் அவர் துறவி இல்லை துறவறம் பெறாத யாரும் வெள்ளை மட்டுமே அணிவதும் அதுவும் இந்துக்கள் கலாச்சாரம் தான் என்பதை இங்கு பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதே இங்கு பொது நீதி
வரலாற்று ஆய்வியல் அறிஞர் டாக்டர் மா. இராச மாணிக்கனார் தனது கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டதென்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
கருத்துகள்