பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு அமையும் அது நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்க வேண்டிய சூழல் எழும் அப்போதைய ஆளும் கட்சி ஆட்சியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும்,
அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அவர்கள், "பெரும்பான்மையான மக்களின் மனதில் 'உண்மையான அச்சங்கள்' உள்ளன. மக்களின் இந்த அச்சத்தை சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் வெளிப்படுத்தி உள்ளனர். மக்களவைத் தேர்தல் 2024- ஐ இந்தியந் தேர்தல் ஆணையம் நடத்திய விதம் கவலையளிப்பதாக உள்ளது. அதோடு, தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால், அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது. அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம்.
முன்னாள் அரசு உயரதிகாரிகளின் அமைப்பான அரசியலமைப்பு நடத்தைக் குழு, தேர்தலின் நேர்மை குறித்து கடந்த வாரம் 'கவலை' தெரிவித்ததை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 'தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொறுப்பான அமைப்புகளாலும் மரியாதைக்குரிய சமூகத்தினராலும் பலமுறை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த காலங்களில் எந்தவொரு தேர்தல் ஆணையமும் தற்போதைய தேர்தல் ஆணையத்தைப் போல் கடமைகளை நிறைவேற்றத் தயங்கியதில்லை. இதைக் கூறுவதற்கு நாங்கள் வேதனைப்படுகிறோம்' என்று முன்னாள் அரசு உயரதிகாரிகளின் அரசியலமைப்பு நடத்தைக் குழு தெரிவித்திருந்தது
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதோடு, சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆளும் கட்சித் தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக குறைந்தபட்ச நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், குடியரசுத் தலைவருக்கு கடுமையான பொறுப்புகள் சுமத்தப்படும். அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை முதலில் அழைப்பது எனும் நிறுவப்பட்ட ஜனநாயக முன்மாதிரியைப் பின்பற்றுவார் மேலும், குதிரை பேரத்தின் சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே தடுக்கவும் முயற்சிப்பார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும்,
சாத்தியமான பேரழிவைத் தடுக்கவும், போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை எண்ணும் போதும், முடிவுகளை அறிவிக்கும் போதும் ஏதேனும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுமானால் அவற்றை தடுக்கவும், தீவிர நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் தயாராக இருக்க வேண்டும். என கோரிக்கை வைத்தனர் நீதிபதிகள்"அரசியலமைப்பு நெருக்கடி" ஏற்படுமானால் அதை எதிர் கொள்ள முதல் ஐந்து நீதிபதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எங்கள் அச்சங்கள் தவறானவையாக இருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். வாக்குகள் எண்ணப்பட்டு, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் ஆணைப்படி அதிகார மாற்றம் சுமுகமாக முடிவடைய வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
.தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலை பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்டிருப்பது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவு. அந்த வகையில் இது இந்தியா கூட்டணிக்கு வெற்றி. இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைபெற்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு உத்தரபிரதேச மக்கள் கொடுத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி இது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால் நாடாளுமன்றத் தேர்தலிலோடு அங்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் வெற்றிபெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி ஒரு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில்.இந்தச் சூழலில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருடன் மாரட்டிய சரத் பவார் பேசுகிறாராம். பாரதிய ஜனதா கட்சி இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை மகாராஷ்டிராவில் சரத் பவார் அரசியலில் நீடிப்பாரா? பாஜக என்ற மிகப்பெரிய பிம்பத்திற்கு முன் அவர் தாக்கு பிடிப்பாரா என்று கேள்விகள் எழுந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து விட்டது. கட்சி இரண்டாக உடைந்து அஜித் பவார் அணி பாஜக கூட்டணிக்குப் போய்விட்டது.
அப்படி இருக்க சரத் பவார் என்ன செய்வார் என்ற கேள்வி நிலவியது. ஆனால் அதை எல்லாம் குறித்து கவலைப்படாமல் தன்னுடைய விஷயங்களை மிக கவனமாக செய்து வந்தார். அவர் எங்குமே பாரதிய ஜனதா கட்சியைக் குறித்து கவலைப்படவில்லை.
அடிப்படை விஷயங்களில் சரியாக இருங்கள். அதற்கு பின் நேரம் கிடைக்கும் போது பெரிய விஷயங்களை கவனிக்கலாம் என்பார்கள். அப்படித்தான் சரத் பவாரும், பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது குறித்துக் கவலைப்படாமல், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 20 + இடங்களை வெல்ல மட்டும் குறி வைத்து களமிறங்கினார். இப்போது அவர் திட்டமிட்டபடியே 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதில் சரத் பாவரின் தேசியவாத காங்கிரஸ் மட்டும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சரத் பவார் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பெரிய விஷயமான பாரதிய ஜனதா கட்சியை நோக்கி தன் பார்வையைத் திருப்பாமல் உள்ளூர் அளவில் கிரவுண்ட் வேளைகளில் கவனம் செலுத்தினார். தோனி போல 40 வது ஓவரில் கூட சரத் பவார் டொக் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்.
நரேந்திர மோடி போல பேன்சியாக பேசாமல் கிரவுண்டு வேலைகளை மட்டும் 83 வயதில் ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும் தான் இதற்குக் காரணம்.
இதன் விளைவாக இப்போது மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சியின் பின்னடைவு உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராதான் பெரிய அளவில் தீர்மானிக்கப் போகிறது. இங்கே பாரதிய ஜனதா கட்சி கடந்த முறை போல இடங்களை வெல்லவில்லை என்றால் தேசிய அளவிலும் அந்தக் கட்சிக்கு வெகுவாக இடங்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு பாரதிய ஜனதா கட்சி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருடன் சரத் பவார் பேசி வருகிறாரார். பாரதிய ஜனதா கட்சி இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.
பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுக்குப் போன் செய்து ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்தே பிரதமர் மோடி நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார்.
மோடி - நிதிஷ் குமார் இடையே ஆலோசனை நடந்தது. நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு வரும் முன் இந்தியா கூட்டணியில் இருந்தவர். சமீபத்தில் தான் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்தார்.
இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசி வருகிறாராம். பாரதிய ஜனதா கட்சி இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க இவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது,. தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்குமென தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு இல்லாமல் பிரதமர் பதவியும் வழங்க சந்திர பாபு நாயுடுவிற்கு தூது அனுப்பப்பட்டுள்ளதாம்.
இப்போது உள்ள சூழலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணி தான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கமில்லை. பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தாலும் நரேந்திர மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக நரேந்திர மோடியை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பாஜக மாற்றாக வேறு பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரி அல்லது ராஜ்நாத் சிங் ஆகியோர் பெயர்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் பரிசீலிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி என்பது சந்தேகமே
கருத்துகள்