உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் பாராட்டு
உலக அரங்கில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தரமான கல்வி, வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
டைம்ஸ் உயர் கல்வியின் தலைமை உலகளாவிய விவகார அதிகாரி திரு பில் பேட்டியின் பதிவைப் பகிர்ந்து, எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளதாவது:
"இந்திய பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தரமான கல்விக்கான நமது அர்ப்பணிப்பு, ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தருகிறது. நமது கல்வி நிறுவனங்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம், வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவோம். இது நமது இளைஞர்களுக்கு பெரிதும் உதவும்".
கருத்துகள்