நடக்கும் இடைத்தேர்தலில் விக்கிரவாண்டித் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டணி காரணமாக விட்டுக் கொடுத்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி, போட்டியிடுமென தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர் மறைவால் காலியான விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு, ஜூலை மாதம் 10 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக., சார்பில், அந்தக் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியும் தர்மபுரியில் போட்டியிட்டு தொல்வி அடைந்த சித்த மருத்துவம் படித்த டாக்டர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் திட்டமிட்டு வந்தது. திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தததில், பா.ம.க., தலைவர் அன்புமணி, சட்டசபை பா.ம.க., குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அன்புமணி, 'விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு பா.ம.க.,வின் முடிவை அறிவிப்போம்' என்றார். இது தொடர்பாக பா.ஜ க., உடன் பா.ம.க., ஆலோசனை நடத்திய நிலையில் தமிழக பா.ஜ க., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும். கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு எடுத்த முடிவின் படி, இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடுகிறது என்றார்.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான 21 நபர்களில் ஒரு குடும்ப சார்ந்த உறுப்பினர் வேட்பாளர் ஆவார் என்பது தெரிகிறது,
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர் உள்ளிட்ட 21 பேர்
விக்கிரவாண்டி தொகுதி பா.மக, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி , பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அவர்களை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் உடன் உள்ளார்.
கருத்துகள்