மூகமூடிக் கொள்ளையர்கள் விருதுநகரில் மில் வாங்கி தொழில் அதிபர்களாக மாறிய பெண் வழக்குரைஞர் கும்பல் குவிந்த பல கோடி சொத்துக்கள்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நடந்த முகமூடிக் கொள்ளை சம்பவமும் , அதன்பிறகு கொள்ளையடித்த பெண்கள் தொழில் அதிபர்களாக மாறியது குறித்தும் திரைப்படமாகவே எடுக்கலாம்.
வக்கீல், ஆடிட்டர் உள்பட படித்து முடித்து திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை போல நடந்த சம்பவம் தான் இந்த செய்தி:-
கொள்ளையடித்த நகைகளை விற்று நூற்பாலை வாங்கியருக்கிறது இந்தக் கொள்ளையர் கும்பல். அது தொடர்பாக 2 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட மேலும் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அப்படி சில மாதங்களுக்கு முன்பு இராஜபாளையத்தில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராவின் காட்சியில் சிக்கினார். ஆனாலும், அந்த நபர் முகமூடி அணிந்திருந்ததால் காவல்துறையினரால் அவரை அடையாளம் காண முடியாத நிலையிலிருந்தது.
அதே நேரத்தில் விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்த முகமூக்டி கொள்ளை தொடர்பான பல வழக்குகள் பதிவான நிலையில் கண்காணிப்புக் கேமரா பதிவு காட்சிகளில் பார்த்த ஒருவரைப் போல் உருவம் பதிவாகி இருந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்ததையடுத்து முக அமைப்பு ஒற்றுமையைக் கவனித்த காவல்துறையினர், முகமூடிக் கொள்ளையர்கள் தனி நெட்வொர்க்காக செயல்படுவது தெரியவந்த நிலையைக் கண்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படைக் காவல்துறையினர் விசாரணையில், இந்தக் கொள்ளைகளுக்கு மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவன் தான் மூளையாகச் செயல்பட்டதை அறிந்தனர். இந்த நிலையில், இராஜபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தேனி மாவட்டம் தென்கரை பகுதியை சேர்ந்த ஆடிட்டர் அருண்குமார் (வயது 23), வழக்குரைஞர் சுரேஷ்குமார் (வயது 26) ஆகியோர் காவல் துறையினரிடம் சிக்கினார்கள்.
விசாரணையில், இருவரும் மூர்த்தியின் கூட்டாளிகள் என்பதும் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இராஜபாளையத்தில் தம்பதியிளரைக் கட்டிப்போட்டு நடந்த கொள்ளையில் அவர்கள் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்ததால் இருவரையும் உடனே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் சொன்னது தான் முக்கியத் திருப்பம். இந்த தொடர் கொள்ளையில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் கும்பலின் சில பெண்கள் டிப்-டாப்பாக மார்டனாக உடை அணிந்து தெருத்தெருவாக் சென்று நோட்டமிடுவதில் ஆட்கள் இல்லாத வீடு அல்லது, தனியாக ஒன்றிரண்டு பேர் வசிக்கும் வீடுகளைக் கண்டறிந்து அந்த பெண்கள் துப்புக் கூலி போல கூறுவார்களாம். அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, ஆடிட்டர் சுரேஷ்குமார், வழக்குரைஞர் அருண்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து பல இடங்களில் முகமூடிக் கொள்ளையை அரங்கேற்றுவார்களாம்.
இந்த விவகாரத்தில் மூர்த்தியின் உறவினர்களான இராஜபாளையம் அருகில் ஆவாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சீனியம்மாள் (வயது 53), மோகன் (வயது 40), அவருடைய மனைவி லட்சுமி (வயது 38), அவரது உறவினர் மகாலட்சுமி (வயது 33). மற்றும் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர்கள்பிரியா (வயது 29), நாகஜோதி (வயது 26) ஆகிய 6 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த பணம், நகைகளை விற்று கோடீஸ்வரர்களாக இந்த கும்பல் மாறியுள்ளது. அதன் மூலம் ராஜபாளையத்தில், மதுரை செல்லும் சாலையில் ரூபாய் . நான்கு கோடி மதிப்பிலான ஒரு நூற்பாலை மையும் விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான பதிவுத்துறை ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். இந்தக் கொள்ளைக் கும்பலிடம் இதுவரை 150 பவுன் நகைகள், ரூபாய்.2½ லட்சம் ரொக்கம் மற்றும் மடிக்கணினி, செல்போன்கள் என ரூபாய் .84 லட்சம் மதிப்பிலான பொருட்களை இதுவரை கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை விற்று இராஜபாளையத்தில் வாங்கிய ரூபாய். நான்கு கோடி மதிப்பிலான பழைய நூற்பாலை மட்டுமல்லாமல், மதுரையில் பல கோடியில் ஆடம்பரமான பங்களாவும், வேறு சில சொத்துக்களும் வாங்கியிருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தகவல் வந்துள்ளது. அதில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் பல கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட், மற்றும் இராஜபாளையத்தில் பழைய காட்டன் மில், புதிய பேருந்து நிலையமருகே பல ஏக்கர் பரப்பிலான காலி மனையிடங்கள் உள்ளிட்டவைகளை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மூர்த்தி உள்ளிட்ட ஐந்து நபர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதன் பிறகு தான் இன்னும் பல தகவல்கள் தெரியவரும்.
கருத்துகள்