பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக திரு ஜுவல் ஓரம் பொறுப்பேற்றார்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக திரு ஜுவல் ஓரம் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். இவரை இந்தத் துறையின் செயலாளர் திரு விபு நாயர் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்த அமைச்சகம் நாடு முழுவதும் பழங்குடியினரின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய வெகு சிறப்பாக பணியாற்றியுள்ளது என்றார்
அமைச்சராக பொறுப்பேற்ற திரு ஜுவல் ஓரம், செயல்பாட்டில் உள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
கருத்துகள்