கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த ‘கலை சிகிச்சை’ முறைகள்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மேற்கொண்ட ஆய்வில், ஊழியர்களின் ஆக்கப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை வளர்ப்பதே, நிலையற்ற வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவற்கான அணுகுமுறையாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப், ஜெராக்ஸ் பார்க், சீமென்ஸ், ஐபிஎம் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் மேலாண் இலக்குகளை அடையும் நோக்கில் கலைசார்ந்த சிகிச்சைகளை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன. பணியிடங்களில் எவ்வாறு கலைநுட்பங்களைப் பயன்படுத்துவது என இந்த ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த பெரு நிறுவன கலாச்சாரமும் செழுமையடைகிறது.
சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான பேராசிரியை வி.விஜயலட்சுமி, அவரின் முனைவர் பட்ட மாணவி செல்வி. எம்.ஜனனி ஆகியோர், பணியாளர்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க பல்வேறு முறைகளை இந்த ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஜர்னல் ஆஃப் ஆர்கனைசேஷனல் சேஞ்சு மேனேஜ்மெண்ட் (DOI: 10.1108/JOCM-03-2023-0092) என்பதில் வெளியிடப்பட்டுள்ளது,
இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளை விவரித்த இணைக் கட்டுரையாளரான சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறையின் பேராசிரியை வி.விஜயலட்சுமி, “கலைகளுக்கென குறிப்பிடத்தக்க வரலாறும், எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகளை வடிவமைக்கும் திறன்களும் உண்டு. பாரம்பரியப் பயிற்சி முறைகளுடன் ஒப்பிடும்போது, அனுபவரீதியான கலை முறைகள் நேர்மறையான மனநிலையைத் தூண்டுவதுடன் படைப்பாற்றலையும் புதுமைகளையும் ஊக்குவிக்கின்றன. பணியிடத்தில் ஒருவரின் சிந்தனையையும் நடத்தையையும் விரிவுபடுத்த ஏதுவாக மேம்பட்ட நன்மைகளை வழங்குகின்றன” என்றார்.
மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழலில் அவர்களின் ஆற்றலையும் ஊக்கத்தையும் நிலைநிறுத்த, நெருக்கடியான சமயங்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தலைமுறை மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் உலகை மாற்றியமைக்க நிலையான தேவைப்பாடு ஆகியவை பணியாளர்களின் திறனை அதிகரிக்கச் செய்யும் வழிகளாகும்.
‘பணியாளர் சுறுசுறுப்பு’ (Workforce Agility) என்ற கருத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். நிறுவன சவால்களை எதிர்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள இது உதவுகிறது. போட்டிகள் நிறைந்த வணிகச் சூழலில் செயல்படும்போது வாய்ப்புகளையும், அபாயங்களையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கும் இது உதவியாக இருக்கிறது.
பணியாளர்களின் சுறுசுறுப்பை அதிகரிப்பதற்கான வழக்கமான முயற்சிகளில் தனிப்பட்ட பணியாளர் ஒருவருக்கு மிக அரிதாகத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனிநபர்களின் சுறுசுறுப்பை மேம்படுத்தும் விதத்தில் அவர்களின் குணநலன்கள் இதுவரை மிகக் குறைந்த அளவே கவனம் பெற்றுள்ளன. எனினும், பணிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஊழியர்களின் ஆக்கபூர்வமான தேவைகளைப் பாதுகாப்பதில் பின்தங்கியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஊழியர்களின் எண்ணங்களை- நடத்தைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பணியில் உள்ள நெறிமுறைச் சங்கடங்கள் போன்ற சிக்கல்களைப் பற்றி சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். கலை அடிப்படையிலான முறைகளில் பயிற்சி பெற்ற செயல்பாட்டாளர் ஒருவரால்தான், எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து ஏற்கும் நிலைப்பாட்டிற்கு ஊழியர்களை மெதுவாக வழிநடத்த முடியும்.
சென்னை ஐஐடி மேலாண்மை கல்வித் துறையின் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரும், கட்டுரையாளருமான செல்வி எம்.ஜனனி தமது முனைவர் பட்ட ஆய்வறிக்கை குறித்து விவரிக்கையில், “இந்த ஆய்வு தொடர்புடைய பலருக்கு சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், பாரம்பரியமான பயிற்சி அடிப்படையிலான அமைப்பிலிருந்து அனுபவமிக்க முறைக்கு மாற்றுவதுடன் நிறுவனங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இது உதவிகரமாக இருக்கும். ஊழியர்களிடையே உள் மற்றும் வெளிப்புற உரையாடல்கள், புதிய உறவுகள்- சிந்தனை முறைகளை உருவாக்கலாம். இது ஒரு நல்ல, அக்கறை மிகுந்த கூட்டுப் பணிக் கலாச்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படக் கூடும்” என்றார்.
நிறுவனங்களுக்கிடையே இருந்துவரும் நவீன வாழ்க்கைமுறை, உறுதியான கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதால் ஊழியர்களிடமிருந்து இலக்குகளையும், எட்டவேண்டிய நிலையையும் நிர்ணயிக்கக் கோரலாம். இது வேலைச் சூழலில் சலிப்பையோ ஆக்கப்பூர்வமான வெற்றிடத்தையோ ஏற்படுத்தும். காலப்போக்கில், பணியாளரின் உற்பத்தித்திறனில் குறிப்பிட்ட அளவு சலிப்பை ஏற்படுத்தக்கூடும், பணியாளர்கள் குறைந்தபட்சக் கடமைகளை செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. தங்களுடைய வேலைகளுக்குத் தொடர்பில்லாத ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு அதிக நேரம் செலவிட ஆர்வம் கொள்கின்றனர்.
பணியாளர் ஒருவரின் உளம்சார்ந்த அம்சங்களைப் பிரிப்பதன் மூலம், தங்கள் வேலைகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஏதுவாக மகிழ்ச்சியான மனநிலையோடு முக்கிய பங்களிப்பை வழங்குவதை இந்த ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது.
கருத்துகள்