தேவர் பட்டம் அரசாணை; தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையர் ஜாதிகளை தேவர் என அறிவித்தது முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு அதை அப்போதைய தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கர் இ ஆ ப அரசாணையாக வெளியிட்ட நிலையில் அது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் அதை அறிவித்த அரசாணையை தற்போது நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையர் ஜாதியினரை இணைந்து தேவர் பட்டமாக அழைக்க பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் உள்ளிட்ட (BC/MBC/ DNC ) பிரிவுகள் படி சான்றிதழ்கள் இதுவரை பெறப்பட்ட நிலையில் ஒரே பிரிவாக பொதுப் பெயரில் அழைக்க பகுதிகள் வாரியாக சில தடைகள் இருந்தபோதிலும் அரசாணை வெளியிடப்பட்டது அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையர் ஜாதிகளை தேவர் என்ற பொதுவான பெயரில் அழைப்பது தொடர்பாக 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அப்போதய தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கர் பெயரில் அரசாணையை வெளியிட்டது.
அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என வழக்கறிஞர் எட்டி மங்கலம் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அப்போது மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழ்நாடு அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்து அப்போது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எட்டி மங்கலம் பி. ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுத் தள்ளி வைத்தது.
முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்திற்கு உரிய ‘தேவர்' பட்டத்தின் பெயரில் ஒரே பெயராக அரசாணையை அமல்படுத்தி அழைக்கலாம் என11.9.1995-ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை பிறப்பித்தது.
அந்த அரசாணையை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.” அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது அதன் அடிப்படையில் தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்த மனுவை ஏற்று தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்