இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வு லாரிப் போக்குவரத்தை ஊக்குவிக்க நித்தி கியர் ஷிப்ட் போட்டியை நித்தி ஆயோக் அறிவித்துள்ளது
ஐஐஎம் பெங்களூரு உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இணைந்து, நித்தி ஆயோக், 'நித்தி கியர்ஷிஃப்ட் சேலஞ்ச்' எனப்படும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த முன்னோடி ஹேக்கத்தான் இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வுடன் லாரிகளை இயக்கும் சூழலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நித்தி கியர்ஷிஃப்ட் சவால் மாணவர்கள், போக்குவரத்து சேவைப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை மின்சார லாரிகள் ( டிரக்) தொடர்பாக புதுமையான வணிக மாதிரிகளை உருவாக்க அழைக்கிறது.
இந்த ஹேக்கத்தான் இரண்டு சுற்றுகளாக நடைபெறும்ம். முதல் சுற்றில், உயர்மட்ட உத்திகள், ஆரம்ப வணிக மாதிரிகள் ஆகியவற்றை அணிகள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது சுற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள், முதன்மை, இரண்டாம் நிலை ஆராய்ச்சிகள் மூலம் விரிவான வணிக மாதிரிகளை வழங்கும். பயனுள்ள தீர்வுகளை உறுதி செய்வதற்காக இந்த முன்மொழிவுகள் தொழில்துறை தலைவர்களால் வழிநடத்தப்படும்.
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. இது 140 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சீராகப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இந்தியாவின் கார்பன் உமிழ்வுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் சாலை வழியான சரக்குப் போக்குவரத்து காரணமாக இருப்பதால், மிகவும் நிலையான தீர்வுகளுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மின்சார டிரக்குகள் (லாரி) உமிழ்வைக் குறைப்பதற்கும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பை வழங்குவதால், சரக்கு போக்குவரத்தை மின்மயமாக்குவது ஒரு முக்கிய முன்னுரிமையாகும்.
கியர்ஷிஃப்ட் சவால் இந்தியாவில் நிலையான சரக்கு போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக அமையும். பங்கேற்பாளர்களின் படைப்பாற்றல், நிபுணத்துவத்தைத் வெளிக் கொணர்வது மூலம், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்குகளை விரைவுபடுத்துவதற்கான நடைமுறை தீர்வுகளை உருவாக்குவதை ஹேக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும்.
மேலும் தகவலுக்கும் கியர்ஷிஃப்ட் சவாலில் பங்கேற்கவும், இந்த இணைய தள இணைப்பைப் பார்க்கலாம்:
https://unstop.com/competitions/niti-gearshift-challenge-vista-2024-iim-bangalores-international-business-summit-iim-bangalore-1044210
கருத்துகள்