இரத்த சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் கிராமத்துப் பின்னணியில்
மிகவும் அழுத்தமாகச் சொல்லும் கதையம்சம். ஒரு சிறிய பிரச்னையால் பிரிந்துபோன குடும்பம், 25 வருடங்களுக்குப் பின்னர் எப்படி ஒன்றாக இணைகிறது என்பது தான் வீராயி மக்கள் கதை.
தற்போதய காலச் சூழலில் சிதைந்து வரும் கூட்டுக்குடும்ப வாழ்வியல் கலாசாரத்தை மீட்டெடுக்க முயலும் செயல், முடியுமா, முடியாதோ ! ஆனால் இப்படத்தின் மூலம் முயற்சித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடந்தியுள்ளது இக் குழு எழுத்தாளர் நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட வேல ராமமூர்த்தி, காலம்சென்ற நடிகர் மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய ’வீராயி மக்கள்’ திரைப்படத்தின் டிரைவரான அதாவது முன்னோட்டக் காட்சி எனப்படும் First Look சுவரொட்டி எனும் போஸ்டர் வெளியானது,
இசை வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் நடிகர் வேல. ராமமூர்த்தி, தயாரிப்பாளர்-ஹீரோ சுரேஷ் நந்தா, எழுதி இயக்கிய நாகராஜ் கருப்பையா, இயக்குனர் பேரரசு, லெனின், வெங்கட், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, ரவி மரியா, கேபிள் சங்கர், ரமா, சிந்தியா, பாடலாசிரியர் மதுரகவி படக்குழுவினர்
@teamaimpr சார்பில் மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா உள்ளிட்டோர் நடித்த "வீராயிமக்கள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘வீராயி மக்கள்'. எம். சீனிவாசன் ஒளிப்பதிவில், தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்த திரைப்படத்தை
இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா பேசிய போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடு சொல்லும் படம். சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்கள் என்பது தனி சுகத்தை, விவரிக்க முடியாத உணர்வைத் தருவது. அதில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வது தான் அழகு என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.
கண்டிப்பாக இந்தக் கதை ஒவ்வொருவருக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கும். புதுக்கோட்டை, அறந்தாங்கி பின்னணியில் இதன் கதை களம் நடக்கிறது. அந்தப் பகுதியின் பேசும் வட்டார வழக்கு மொழியையும் படத்தில் கூறுகிறேன். இதில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம்.9-ஆம் தேதி படம் வெளியாகிறது” என்றார். இந்தத் திரைப்படத்தில் நடித்து முடித்த போது திடீரென்று நடிகர் மாரிமுத்து மரணமடைந்ததால், அவரது டப்பிங் மட்டும் இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நடிகர் மாரிமுத்துவின் குரல் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்தது என்பதால், அவரைப் போலவே பேச வைக்க 100 பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம்.
இறுதியில் உதவி இயக்குனர் அமல்ராஜ் என்பவரை டப்பிங் பேச வைத்தோம். அவரது குரல் 100 சதவீதம் பேர் மாரிமுத்துவின் குரலுடன் பொருந்தியுள்ளது’ எனத் தெரிவித்தார், படத்தில் நெஞ்சுக்குள்ளே பாடல் இதமான சூழலில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
கருத்துகள்