மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்ட்ரைக் பால்கன் சென்சாரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆபீஸ்
365 உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பங்கள் முடங்கின. சர்வதேச அளவில் ஐடி துறைகள், வங்கிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகள் முடங்கின. சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பால்கன் சென்சாரை மேம்படுத்திய போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாககா கூறப்படும் நிலையில், பயனர்களின் வீண்டோசில் Blue Screen of Death என தோன்றியது. மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்கி வரும் கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் மென்போருளில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் எனக் தெரிகிறது. அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் கிரவுட்ஸ்ட்ரைக். 2011ஆம் ஆண்டில் தொடங்கிய நிறுவனம், சர்வதேச அளவிலான பெரு நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்குகிறது. சர்வதேச அளவில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்களுக்கு பால்கன் தொழில்நுட்பம் மூலம் சைபர் பாதுகாப்பை கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வழங்கி வருகிறது. கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய கிரவுட்ஸ்ட்ரைக்கின் பால்கன் சென்சார் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்ட போது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.
இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து என உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன.2008 ஆம் ஆண்டு மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முகநூல் ஒருநாள் முழுவதும் முடங்கியது. அப்போது 8 கோடி சந்தாதாரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மைக்ரோ சாஃப்ட் மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுவதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என குறிப்பிடப்பட்டுள்ள
நிலையில், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது" என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளக்கம்.
Crowdstrike என்பது சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆகும். கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் இந்த Crowdstrike, விண்டோஸ் சாப்ட்வேரில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி, ரியல் டைமில் பாதுகாப்பு சிக்கல்களை கிளவுட் அடிப்படையிலான ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இந்த நிறுவனம் விண்டோஸில் தீர்வுகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்த Crowdstrike-ன் சமீபத்திய அப்டேட்டில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் எனப்படும் Blue Screen of Death எரர் இணைக்கப்பட, அது உலகம் முழுவதும் விண்டோஸ் சேவை பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்ந்தது. Crowdstrike-ன் கடைசி அப்டேட் வியாழக்கிழமை இரவு வந்துள்ளது. இதன் எரர், Falcon சென்சாரில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு - ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது" என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் பொது நீதி யாதெனில் :- ஒரு நாள் உலக கார்ப்பரேட் வணிக மாபியாக்களின் போட்டியின்
எதிரொலி.
உலக சுழற்சியில் எல்லாம் ஒருநாள் மாறும்.
விஞ்ஞான வளர்ச்சியால் பறிக்கப்பட்ட மனித பாரம்பரியங்களே இறுதியில் வெல்லும்.
நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி,செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் என்று இயற்கை பாரம்பரியங்களுக்கு திரும்ப ஆரம்பித்ததே இதற்கெல்லாம் சாட்சி. ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சி அதில் மானுடம் முயற்சி இயற்கையின் வீழ்ச்சி தான் பிழைப்பு வாதிகள் எழுச்சி
கருத்துகள்