பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீரரையும் இந்தியாவின் பெருமை என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அந்த ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டு நிகழ்வில் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் இந்த வேளையில், இந்திய குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகள். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்தியாவின் பெருமை. அவர்கள் அனைவரும் பிரகாசிக்கட்டும். விளையாட்டுத்திறனின் உண்மையான உணர்வை உருவகப்படுத்தட்டும். அவர்களின் சிறந்த செயல்திறன் நமக்கு ஊக்கமளிக்கட்டும். #பாரிஸ்2024"
கருத்துகள்